‘70’s-களிலியே இந்தியா ஜெயிச்சு இருக்கு’.. ‘அப்போ கோலி பிறந்திருக்கவே மாட்டாரு’.. முன்னாள் கேப்டன் காட்டம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

விராட் கோலி பிறப்பதற்கு முன்பாகவே இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றி பெற்றுள்ளதாக கவாஸ்கர் காட்டமாக தெரிவித்துள்ளார்.

‘70’s-களிலியே இந்தியா ஜெயிச்சு இருக்கு’.. ‘அப்போ கோலி பிறந்திருக்கவே மாட்டாரு’.. முன்னாள் கேப்டன் காட்டம்..!

கொல்கத்தாவில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘இந்திய அணியின் வெற்றி சவுரவ் கங்குலி காலத்திலிருந்து தொடங்கியது’ என பேசியிருந்தார்.

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், 1970 மற்றும் 1980-ஆம் ஆண்டுகளிலேயே இந்திய அணி வெற்றி பெற்றதாகவும், அப்போது விராட் கோலி பிறக்கவே இல்லை என தெரிவித்தார். பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி குறித்து சிறப்பாக பேசுவதற்காக இப்படி பேசியிருக்கலாம். 2000-ஆம் ஆண்டில் தான் கிரிக்கெட் தொடங்கியது என எல்லோரும் நினைக்கின்றனர். ஆனால் இந்திய அணி 70-களிலேயே வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளை குவித்துள்ளது என தெரிவித்துள்ளார்.

BCCI, VIRATKOHLI, CRICKET, GAVASKAR, INDVBAN, PINKBALLTEST, TEAMINDIA