Ind Vs Pak: தேசிய கீதம் பாடும்போது எமோஷனல் ஆன ரோஹித் ஷர்மா.. வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை டி20 போட்டியில் இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்று வருகிறது.
இந்த வருடத்திற்கான டி20 உலக கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று மேல்போர்னில் துவங்கி இருக்கிறது.
முன்னதாக இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். இதனை அடுத்து பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்து வருகிறது. முதல் ஓவரை வீசிய புவனேஸ்வர் குமார் ஒரு ரன்னை மட்டுமே விட்டுக் கொடுத்து அசத்தினார். அதனை தொடர்ந்து இரண்டாவது ஓவரை வீச வந்த அர்ஷ்தீப் சிங் முதல் பந்தியிலேயே பாபர் ஆசம் விக்கெட்டை தூக்கினார்.
இதனை தொடர்ந்து இன்னொரு துவக்க ஆட்டக்காரரான முகமது ரிஸ்வான் விக்கெட்டை நான்காவது ஓவரில் வீழ்த்தி அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறார் அர்ஷ்தீப் சிங். தொடர்ந்து இந்திய அணியின் பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இந்நிலையில், இந்த போட்டியில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயனும் வர்ணனை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மேட்ச் துவங்குவதற்கு முன்னர் இரு நாடுகளின் தேசியகீதம் இசைக்கப்பட்டது. அப்போது இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, உணர்ச்சிவசப்பட்டார். கண்களை இருக்க மூடிக்கொண்டு வானத்தை நோக்கி அவர் முகத்தை திருப்பியது ரசிகர்களை நெகிழ செய்தது.
இதனிடையே, இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, தேசியகீதம் பாடும்போது உணர்ச்சி வயப்பட்ட வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Emotions 💙🫡🇮🇳 pic.twitter.com/9Y8JggSNex
— Max (@chahanicharcha) October 23, 2022
மற்ற செய்திகள்