ஆமா.. இது அதுல்ல.. BP-ஐ எகிற வைத்த இந்தியா Vs வங்கதேச T20 போட்டி.. இயக்குனர் வெங்கட் பிரபுவின் டைமிங் ட்வீட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்கதேச அணியுடனான போட்டியில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபுவின் ட்வீட் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஆமா.. இது அதுல்ல.. BP-ஐ எகிற வைத்த இந்தியா Vs வங்கதேச T20 போட்டி.. இயக்குனர் வெங்கட் பிரபுவின் டைமிங் ட்வீட்..!

Also Read | அடிதூள்.. 3 மாசம் வரையில் பயன்படுத்தலாம்... புதிய 'ஆவின் டிலைட்' பசும்பால்...

T20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த தொடரில் அரையிறுதிக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருந்த இந்திய அணி இன்று வங்கதேசத்தை எதிர்கொண்டது. அடிலெய்டில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 186 ரன்கள் எடுத்திருந்தது. இதில் விராட் கோலி ஒரு சிக்ஸர் மற்றும் 8 பவுண்டரிகளுடன் 64 ரன்கள் குவித்தார். முதல் மூன்று போட்டிகளிலும் பெரிதும் சோபிக்காத ராகுல் இந்த போட்டியில் அபாரமாக ஆடி அரை சதமடித்தார்.

இதனையடுத்து 187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம் ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது. துவக்க ஆட்டக்காரரான லிட்டன் தாஸ் 27 பந்துகளில் 60 ரன்கள் குவித்தார். இதனிடையே மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் போட்டி 16 ஓவர்களாகவும் டார்கெட் 151 ஆகவும் மாற்றப்பட்டது. இதனையடுத்து களமிறங்கிய வங்கதேச வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர். பரபரப்பாக சென்ற இந்தப் போட்டியில் (DLS முறைப்படி) 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தான் இயக்கிய சென்னை 600028-II படத்துடன் இந்த போட்டியை ஒப்பிட்டிருக்கிறார். அதனுடன், படத்தின் ஸ்டில்களையும் அவர் பகிர்ந்திருக்கிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் ஜெய், வைபவ், சிவா, பிரேம்ஜி, இளவரசு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்தின் இறுதிக்கட்டத்தில் நடைபெறும் மேட்சில் மழை குறுக்கீடு செய்தாலும் இறுதியில் ஜெய்-கூட்டணி வெற்றி பெறுவதை இந்தியா - வங்கதேச போட்டியுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

Also Read | KL ராகுலின் இமாலய சிக்ஸ்.. எதிரே நின்ன விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ..!

CRICKET, T20 WORLD CUP 2022, INDIA VS BANGLADESH, VENKAT PRABHU, DIRECTOR VENKAT PRABHU

மற்ற செய்திகள்