‘கொரோனா பாதிப்பு நேரத்திலும்’... ‘24 மணிநேரத்தில் எல்லாமே தீர்ந்து போச்சு’... ‘மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் 24 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்துள்ளன.

‘கொரோனா பாதிப்பு நேரத்திலும்’... ‘24 மணிநேரத்தில் எல்லாமே தீர்ந்து போச்சு’... ‘மகிழ்ச்சியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம்’...!!!

இந்திய அணி, ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாட உள்ளது. முதல் ஒருநாள் போட்டி அடுத்த வெள்ளிக்கிழமை துவங்க உள்ளது. இப்போட்டிகளில் 50 சதவீத பார்வையாளர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இதற்கான டிக்கெட் விற்பனையை ஆன்லைன் மூலம் துவங்கியது.

அதில், முதல் ஒருநாள் போட்டிக்கு மட்டும் 1,900 டிக்கெட்கள் இன்னும் விற்பனையாகவில்லை. மற்ற இரண்டு ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் 24 மணி நேரத்திற்குள் விற்றுத் தீர்ந்துவிட்டது. கொரோனா நேரத்திலும் டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததால், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மகிழ்ச்சியில் உள்ளது.

டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை குறித்து இன்னும் அறிவிப்புகள் வெளியாகவில்லை. ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நிர்வாகி ஆண்டனி ஈவர்ட் கூறுகையில், “இந்திய, ஆஸ்திரேலிய தொடர் உலக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டியைக் காண 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதியளித்துள்ளோம். உரிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்” எனக் கூறினார். ஒருநாள், டி20 தொடர்கள் சிட்னி மற்றும் கன்பெரா மாகாணத்தில் மட்டுமே நடைபெறவுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் கடந்த ஜூலை மாதம் துவங்கிய நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் போட்டிகளில் முதன்முறையாக ரசிகர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். வெளிநாட்டில் இருந்து வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்