Veetla Vishesham Mob Others Page USA

இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா…. பிசிசிஐ வெளியிட்ட புதிய அணியில் இடம்பெற்ற வீரர்கள்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

அயர்லாந்து அணிக்கு எதிரான டி 20 தொடருக்கான இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா…. பிசிசிஐ வெளியிட்ட புதிய அணியில் இடம்பெற்ற வீரர்கள்

கேப்டனாக ஹர்திக்…

இந்தியா ஜூன் 26 மற்றும் 28 ஆகிய தேதிகளில் அயர்லாந்து அணிக்கு எதிராக 2 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த போட்டிகளுக்கான அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் வீரர் விவிஎஸ் லக்ஷ்மன் இந்த சுற்றுப்பயணத்தில் தலைமை பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார். அவருக்கு உதவியாக ஷிதான்ஷு கோடக் (பேட்டிங் பயிற்சியாளர்), சாய்ராஜ் பஹுதுலே (பந்துவீச்சு பயிற்சியாளர்) மற்றும் முனிஷ் பாலி (பீல்டிங் பயிற்சியாளர்) ஆகியோர் செயல்படுவார்கள்.

இந்த 17 பேர் கொண்ட அணிக்கு கேப்டனாக சமீபத்தில் ஐபிஎல் கோப்பையை வென்ற ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளார். அணியில், ராகுல் திரிபாதி மற்றும்  சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

India team captain hardhik pandya bcci announcement

17 பேர் கொண்ட இந்திய அணி…

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), யுஷ்வேந்திர சாஹல், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக்

India team captain hardhik pandya bcci announcement

இங்கிலாந்துடன் டெஸ்ட் போட்டி…

இதே நேரத்தில் மற்றொரு இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட ஆயத்தமாகி வருகிறது. கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டி மட்டும் நடக்காத நிலையில் தற்போது அந்த போட்டி நடக்க உள்ளது.

BCCI, HARDHIK PANDYA, IRELAND, TEAM INDIA

மற்ற செய்திகள்