'2 முறை தவறிப் போன வாய்ப்பு'!.. தடைகளை தகர்த்து... இந்திய ஜெர்சியில் களமிறங்கும்... தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி!.. பிசிசிஐ முடிவின் பின்னணி என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு 3வது முறையாக இந்திய அணியில் விளையாட அழைப்பு வந்துள்ளது.

'2 முறை தவறிப் போன வாய்ப்பு'!.. தடைகளை தகர்த்து... இந்திய ஜெர்சியில் களமிறங்கும்... தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி!.. பிசிசிஐ முடிவின் பின்னணி என்ன?

ஐபிஎல் தொடரில் அசத்திய இளம் வீரர்கள் படையை கொண்டு இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணமானது வரும் ஜூலை மாதத்தில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக 20 பேர் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது.

இலங்கை தொடருக்காக இந்திய அணி வெளியிட்டுள்ள பட்டியலில், தேவ்தத் படிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், நிதிஷ் ராணா, கிருஷ்ணப்பா கவுதம், சேட்டன் சக்காரியா ஆகியோருக்கு முதல் முறையாக சர்வதேச போட்டியில் விளையாட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்கத்தகுந்த விஷயம் என்னவெனில், தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு 3வது முறையாக, இந்திய அணியில் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வருண் சக்கரவர்த்திக்கு, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது டி20 தொடரில் விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் காயம் காரணமாக அந்த தொடரில் இருந்து அவர் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தான் அவருக்கு திருமணமும் நடைபெற்றது. 

பின்னர், 2வது முறையாக இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் போதும் வருண் சக்கரவர்த்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், பிசிசிஐ நடத்திய உடற்தகுதி தேர்வில் அவர் தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில், தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தில் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 

டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ளது. இலங்கை தொடரில் சிறப்பாக விளையாடும் சில வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. இதனால் இந்த முறை வருண் சக்கரவர்த்தி, தனக்கான வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

 

மற்ற செய்திகள்