'கைய மீறி போயிடுச்சு!.. 'அந்த' முடிவ தவிர வேற வழியில்ல!'.. இந்தியா - இலங்கை தொடர்... முக்கிய அறிவிப்பு வெளியீடு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய - இலங்கை அணிகள் இடையேயான ஒருநாள் தொடரில் மேலும் ஒரு புதிய சிக்கல் உருவாகியுள்ளது.

'கைய மீறி போயிடுச்சு!.. 'அந்த' முடிவ தவிர வேற வழியில்ல!'.. இந்தியா - இலங்கை தொடர்... முக்கிய அறிவிப்பு வெளியீடு!

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய 'ஏ' அணி, அங்கு மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. விராட் கோலி தலைமையிலான மெயின் அணி இங்கிலாந்தில் விளையாடி வருவதால், 20 வீரர்கள் கொண்ட இந்திய ஏ அணியை இலங்கைக்கு அனுப்பியுள்ளது பிசிசிஐ.  

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவிருக்கிறது. ஜூலை 13ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது. 2 மற்றும் 3வது ஒரு நாள் போட்டி ஜூலை 16, 18 தேதிகளில் நடைபெறுகிறது. மேலும், டி20 போட்டிகள் ஜூலை 21, 23 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டிகள் அனைத்து கொழும்புவில் உள்ள ப்ரேமதசா மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இந்த தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல புவனேஷ்வர் குமார் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அணியில் ஷிகர் தவான் ( கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் பட்டிக்கல், ருத்ராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷான் ( கீப்பர்), சஞ்சு சாம்சன் ( விக்கெட் கீப்பர்), யுவேந்திர சாஹல், ராகுல் சஹார், கிருஷ்ணப்பா கவுதம், க்ருணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி, புவனேஷ்வர் குமார் ( துணை கேப்டன்), தீபக் சஹார், நவ்தீப் சைனி, சேட்டன் சக்காரியா ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர் மற்றும் அந்த அணியின் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகிய இருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் இங்கிலாந்து தொடரை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய அந்த அணி வீரர்கள் தற்போது தனிமைபப்டுத்தப்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்தில் இருந்து வந்த பயிற்சியாளர் மற்றும் டேட்டா அனலிஸ்ட் ஆகிய இருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

எனினும், முதல் கட்ட சோதனையில் வீரர்கள் எவருக்கும் கொரோனா உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கொரோனா உறுதி ஆகியிருக்கும் சூழலில், அடுத்தக்கட்ட சோதனையில் வீரர்கள் சிலருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த சூழலில், தங்கள் வீரர்களுக்கான தனிமைப்படுத்துதல் காலத்தை மேலும் நீட்டிக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 

இதையடுத்து கொழும்பில் வருகிற 13-ம் தேதி தொடங்க இருந்த இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் 4 நாட்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட அட்டவணையின்படி முதலாவது ஒரு நாள் போட்டி 17ம் தேதி நடக்கிறது. 2வது ஒருநாள் போட்டி 19ம் தேதியும், 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி 21ம் தேதியும் நடைபெறுகிறது. 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடர் முறையே 24, 25, 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தெரிகிறது.

 

மற்ற செய்திகள்