வங்க தேசத்துக்கு எதிரான தொடர்.. இந்திய கிரிக்கெட் அணியில் BCCI செய்த மாற்றம்.. முழுவிபரம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வங்க தேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியை BCCI அறிவித்திருக்கிறது.

வங்க தேசத்துக்கு எதிரான தொடர்.. இந்திய கிரிக்கெட் அணியில் BCCI செய்த மாற்றம்.. முழுவிபரம்..!

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வந்த உலகக்கோப்பை T20 தொடர் முடிவடைந்த நிலையில் இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகளை கொண்டுள்ள T20 தொடரை 1-0 என இந்தியா ஏற்கனவே வென்றிருக்கிறது. இந்நிலையில், ஒருநாள் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது. 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடர் இந்த மாதம் 25 ஆம் தேதி துவங்கி 30 ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது.

India squad for Bangladesh ODI series announced

இதனை தொடர்ந்து இந்திய அணி வங்க தேசத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறது. அங்கே 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா விளையாட இருக்கிறது. ஓய்வில் இருந்த கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் அணிக்கு திரும்பியுள்ளனர். வங்க தேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கடந்த மாதம் அறிவித்தது.

India squad for Bangladesh ODI series announced

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, யாஷ் தயாள் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் இந்த ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

India squad for Bangladesh ODI series announced

BCCI அறிவித்துள்ள வங்க தேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி : ரோஹித் சர்மா (கேப்டன்), கேஎல் ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, ஆர் பண்ட் (கீப்பர்), இஷான் கிஷன் (கீப்பர்), ஷாபாஸ் அகமது, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர் , முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.

INDIA, BANGLADESH, ODI

மற்ற செய்திகள்