அவரை மாதிரி ஒருத்தர் இனி கிடைக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்.. பல வருசமா காலியாக இருக்கும் இடம்.. கம்பீர் காட்டம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் ஆல்ரவுண்டர் தேடல் குறித்து காட்டமான கருத்து தெரிவித்துள்ளார்.

அவரை மாதிரி ஒருத்தர் இனி கிடைக்கிறதெல்லாம் ரொம்ப கஷ்டம்.. பல வருசமா காலியாக இருக்கும் இடம்.. கம்பீர் காட்டம்..!

இத்தன நாளா சைலண்டா இருந்தது இதுக்குதானா.. பாண்ட்யா போட்ட ‘மெகா’ ப்ளான்.. இதை நாங்க எதிர்பார்க்கலயே..!

சிறந்த பேட்ஸ்மேன்கள்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என பல தரமான பேட்ஸ்மேன்கள் இருந்து கொண்டே இருந்தார்கள். கடினமான சமயங்களில் கூட எதிரணியை பந்தாடி ரன்களை குவித்து இந்தியாவுக்காக பல சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

சிறந்த பவுலர்கள்

அதேபோல் ஜவகர் ஸ்ரீநாத், ஜாஹீர் கான், பும்ரா என பல தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் வந்து கொண்டே உள்ளனர். சுழல்பந்துவீச்சிலும் அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின் என பல உலகத்தரம் வாய்ந்த பவுலர்கள் இந்திய அணியிக்கு கிடைத்தனர்.

ஆல்ரவுண்டர்களுக்கு பஞ்சம்

ஆனால் அன்று முதல் இன்று வரை  ஆல்ரவுண்டர்களுக்கு தான் பஞ்சம் இருந்து வருகிறது. கபில்தேவ், யுவராஜ் சிங் என ஆல்ரவுண்டர்களை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு மட்டுமே இருந்துள்ளனர். குறிப்பாக உலகக்கோப்பையை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் கபில் தேவுக்கு பின் இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இன்று வரை கிடைக்கவில்லை. இர்பான் பதான் தொடங்கி தற்போது ஹர்டிக் பாண்டியா வரை ஆல்ரவுண்டர்களை உருவாக்க இந்தியா எத்தனையோ முயற்சிகளை எடுத்தது. ஆனால் இப்போது வரை அதில் முழுமையான வெற்றியை பெறமுடியவில்லை.

India should stop searching for the next Kapil Dev, says Gautam Gambhi

கௌதம் கம்பீர் கருத்து

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய அணியின் முன்னாள் வீரர் கௌதம் கம்பீர், ‘உங்களிடம் ஒன்று இல்லை என்றால் அதை தேடிப் போகக்கூடாது. அது இல்லை என ஒப்புக்கொண்டு அதிலிருந்து நகர முயற்சிக்க வேண்டும். உங்களால் உருவாக்க முடியாததை உருவாக்கலாம் என முயற்சிக்க கூடாது. அதில்தான் பிரச்சனை உள்ளது.

ஆல்ரவுண்டர் தேடல்

சர்வதேச கிரிக்கெட் என்பது வீரரின் செயல்பாட்டை வெளிப்படுத்துவதற்கான ஒரு இடமே தவிர ஒருவரை வளர்ப்பதற்கான இடமில்லை. உள்ளூர் மற்றும் லிஸ்ட் ஏ கிரிகெட்தான் ஒருவரை வளர்ப்பதற்கு சரியான இடம். உங்களுக்கு உங்களின் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நேரடியாக அங்கு சென்று நல்ல செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்’ என கௌதம் கம்பீர் கூறியுள்ளார்.

India should stop searching for the next Kapil Dev, says Gautam Gambhi

கபில்தேவ் இடத்தை யாரும் நிரப்பவில்லை

தொடர்ந்து பேசிய அவர், ‘உண்மையை சொல்ல வேண்டுமானால் கபில் தேவுக்கு பின் ஒரு நல்ல ஆல்ரவுண்டர் கிடைக்கவில்லை. அதனால் அதிலிருந்து நகர்ந்து ரஞ்சி கோப்பை போன்ற உள்ளூர் கிரிக்கெட்டில் திறமையானவரை கண்டறிய வேண்டும். பின்னர் அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட தொடர்ச்சியாக வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒரு சில போட்டிகளில் வாய்ப்பு கொடுத்துவிட்டு உடனே மாற்ற கூடாது’ என கௌதம் கம்பீர் கூறியுள்ளார். கபில் தேவுக்கு பின் அவரின் இடத்தில் கடந்த 25 ஆண்டுகளில் பல இளம் வீரர்களை இந்தியா சோதித்து பார்த்து விட்டது. ஆனால் தற்போது வரை அந்த முயற்சிக்கான முழு வெற்றி கிடைக்கவில்லை என்றே பலரும் கூறுகின்றனர்.

கோலி போன வருச ஐபிஎல் அப்பவே எல்லாத்தையும் சொல்லிட்டாரு.. போட்டுடைத்த பாண்டிங்..!

KAPIL DEV, GAUTAM GAMBHIR, FAST BOWLING ALL-ROUNDER, கபில்தேவ், ஆல்ரவுண்டர் தேடல்

மற்ற செய்திகள்