'22' வருஷத்துல இது தான் 'முதல்' தடவ... 'ஷாக்' கொடுத்த 'இங்கிலாந்து' அணி!!... 'இந்திய' அணிக்கு வந்த 'சோதனை'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வியடைந்தது.

'22' வருஷத்துல இது தான் 'முதல்' தடவ... 'ஷாக்' கொடுத்த 'இங்கிலாந்து' அணி!!... 'இந்திய' அணிக்கு வந்த 'சோதனை'!!!

டாஸ் வென்று பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பிறகு, ஆடிய இந்திய அணி 337 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, பாலோ ஆன் கொடுக்காமல் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த நிலையில், இந்திய அணி அபாரமாக பந்து வீசி 178 ரன்களில் இங்கிலாந்து அணியை மடக்கியது.

தொடர்ந்து, 420 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணியை கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி, திணறடித்தது. சுப்மன் கில் 50 ரன்களும், விராட் கோலி 73 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிக்காததால் இந்திய அணி 192 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டானது. இதனால், இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 22 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. அத்துடன், சொந்த மண்ணில், 14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ச்சியாக வெற்றி பெற்றிருந்த நிலையில், இன்று அதற்கும் இங்கிலாந்து அணி முட்டுக்கட்டை போட்டது.

அது மட்டுமில்லாமல், கோலி தலைமையிலான இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்வி பெறுவது இதுவே முதல் முறையாகும். அதே போல, சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியடைகிறது. முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டிருந்த நிலையில், அதன் பிறகு மூன்றில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்டு தொடரைக் கைப்பற்றியது.

அதே போல, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் இந்திய அணி திரும்ப வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த வெற்றியுடன் இங்கிலாந்து அணி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள நிலையில், இனியுள்ள டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்