‘திரும்பவும் அதே தவறு’... ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-வது முறை’... ‘ஐசிசி எடுத்த நடவடிக்கை’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணிக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இந்தப்போட்டியில் தோல்வி அடைந்தாலும் ஏற்கனவே முந்தைய இரு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்ததால், டி20 தொடரைக் கைப்பற்றியது.
இந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக இந்திய அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பந்துவீச ஆஸ்திரேலிய அணி 93 நிமிடங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டது. ஆனால் இந்திய அணி 107 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது.
இதையடுத்து கேப்டன் விராட் கோலி உள்பட அணி வீரர்களுக்கு போட்டிக் கட்டணத்தில் இருந்து 20 சதவீதம் அபராதமாக விதிக்கப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணிக்கு தாமதமான பந்து வீச்சு காரணமாக அபராதம் விதிக்கப்படுவது இது 2-வது முறையாகும். ஏற்கனவே, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி, பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்