"இது மட்டும் நடந்திருந்தா இந்தியா கூட ஜெயிச்சுருக்கும்".. வாய்ப்பை கோட்டை விட்ட வீரர்கள்.. களத்திலேயே கோபப்பட்டாரா ரோஹித்??
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையே 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடர், தற்போது இந்தியாவில் வைத்து ஆரம்பமாகி உள்ளது.
இதன் முதல் போட்டி, நேற்று (20.09.2022) மொஹாலியில் வைத்து நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன் படி ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரர் கே எல் ராகுல் அதிரடியாக ஆடி அரை சதமடித்தார். இதனைத் தொடர்ந்து, சூர்யகுமார் யாதவும் சிறப்பாக ஆடி ரன் சேர்க்க, கடைசி கட்டத்தில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகள் என ருத்ரதாண்டவம் ஆடினார் ஹர்திக் பாண்டியா.
30 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 71 ரன்கள் எடுத்தார் ஹர்திக் பாண்டியா. இதனால், இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியும் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி இருந்தது. தொடக்க வீரர் கேமரூன் க்ரீன் 30 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இறுதி கட்டத்தில், 21 பந்துகளில் 45 ரன்கள் எடுத்து மேத்யூ வேட் அதிரடி காட்ட, கடைசி ஓவரில் வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தது ஆஸ்திரேலிய அணி.
இந்திய அணியின் பந்து வீச்சும், நடுவே சில கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டதும் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
இதனிடையே, கையில் வந்த ஒரு வாய்ப்பை இந்திய அணி தவற விட்டது தொடர்பான சம்பவம், தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, ஐந்தாவது ஓவரை சாஹல் வீசினார். அப்போது, கேமரூன் பேட்டிங் செய்து கொண்டிருக்க, பந்து பேடில் பட்டது.
இதற்கு இந்திய அணி அப்பீல் செய்யவும் இல்லை என கூறப்படுகிறது. ஆனால், ரீப்ளேயில் பார்த்த போது, அவுட் என்பது தெரிய வந்தது. இதனை அறிந்ததும் இந்திய அணி வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஒரு வேளை கேமரூன் விக்கெட் அப்போதே போயிருந்தால், இந்திய அணிக்கு கூட வெற்றி வாய்ப்பு உருவாகி இருக்கும் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.
அதே போல, அப்பீல் செய்யாமல் போனதற்கு சாஹல் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோர் மீது களத்திலேயே ரோஹித் சர்மா கோபப்படும் காட்சிகள் தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
— Cricket fan (@Cricketfan093) September 20, 2022
மற்ற செய்திகள்