‘ஃபீல்டிங்கில் மிஸ்ஸான கேட்ச்களால்’... ‘கிண்டலுக்கு உள்ளான இந்திய அணி’... ‘அசால்ட்டாக கேட்ச் பிடித்து’... ‘தரமான சம்பவம் செய்த கேப்டன் கோலி’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் ஏராளமான கேட்சுகளை கோட்டை விட்டது குறித்து சுனில் கவாஸ்கர் முதல் பலர் கிண்டலாக கூறிய நிலையில், விராட் கோலி பிடித்த கேட்ச் ஒன்று வைரலாகி வருகிறது.
அடிலெய்டில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸ் முடிவில், இந்திய அணி 244 ரன்களை குவிக்க அடுத்ததாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சை இன்று விளையாட ஆரம்பித்தது. துவக்கம் முதலே இந்திய அணியின் பந்து வீச்சாளர்களிடம் சிக்கி தவித்த ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ரன் குவிக்க திணறினர்.
துவக்க வீரர்களான மேத்யூ வேட், ஜோ பர்ன்ஸ் ஆகியோர் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, அடுத்து அந்த அணியின் நட்சத்திர வீரர்களான லாபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இணைந்தனர். இவர்கள் இருவரும் இந்திய அணிக்கு எதிராக பெரிய ரன் குவிப்பை தருவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில் அஸ்வினின் சூழலில் சிக்கி ஸ்மித் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால் லாபுஷேன் மட்டும் இந்திய வீரர்கள் தவறவிட்ட மூன்று கேட்சிகளின் மூலம் 47 ரன்கள் குவித்தார்.
அந்த அணியின் கேப்டன் டிம் பெய்ன் மட்டும் தட்டுத்தடுமாறி 73 ரன்கள் அடித்து அந்த அணியின் ரன்களை உயர்த்தினார். கடைசியில் 191 ரன்களில் ஆஸ்திரேலிய அணி ஆட்டம் இழந்தது. இன்றைய போட்டியில் இந்திய வீரர்கள் 4 கேட்சுகளை தவற விட்டனர். இந்த கேட்சுகளை பிடித்திருந்தால் இந்த ரன்கள் கூட ஆஸ்திரேலியாவால் எடுத்திருக்க முடியாது. இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இளம் அறிமுக வீரரான கேமரூன் க்ரீன் 41-வது ஓவரில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது, அஸ்வின் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்றார். அப்போது, விராட் கோலி பறந்துசென்று அபாரமாக கேட்ச்சை பிடித்து அசத்தினார். கடந்த சில டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விராட் கோலியும் கேட்ச் மிஸ் செய்த நிலையில், தற்போது இந்த கேட்ச் டெஸ்ட் போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Cameron Green's debut innings was stopped short by an absolute classic from Virat Kohli - and the Indian captain enjoyed it a lot! #OhWhatAFeeling@toyota_Aus | #AUSvIND pic.twitter.com/krXXaZI1at
— cricket.com.au (@cricketcomau) December 18, 2020
Was it a plane ✈️ or a bird 🦅? No it was #ViratKohli superb catch to dismiss #Green#AUSvIND #INDvAUS #INDvsAUS #AUSvsIND #AdelaideTest #kingkohli pic.twitter.com/JsgHNig6nn
— Nasir 🔴 (@ahmeds0271) December 18, 2020
Virat Kohli is flying at Adelaide Oval. Incredible catch Taken by captain Virat Kohli. #INDvAUS pic.twitter.com/uGuNHoiMuN
— CricketMAN2 (@man4_cricket) December 18, 2020
King 👑 @imVkohli what a catch #INDvAUS pic.twitter.com/AYqDqaWjXa
— Sandeep (@sandy09463885) December 18, 2020
மற்ற செய்திகள்