'கதம்... கதம்... எல்லாம் முடிஞ்சிருச்சு!'.. இந்திய அணியில் தோனி இடத்தை நிரப்பப்போகும் வீரர் 'இவர்' தான்!'.. மிடில் ஆர்டர் செட் ஆனது எப்படி?.. ஃபுல் ஃபார்மில் இந்திய அணி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியில் தோனிக்கு மாற்றாக வரப் போகும் வீரர் யார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. அதேபோல் இந்திய அணியில் பல வருடங்களாக பிரச்சனையாக இருந்த 4 மற்றும் 5வது இடத்தை நிரப்ப போகும் வீரர்கள் யார் என்பதும் உறுதியாகிவிட்டது.

'கதம்... கதம்... எல்லாம் முடிஞ்சிருச்சு!'.. இந்திய அணியில் தோனி இடத்தை நிரப்பப்போகும் வீரர் 'இவர்' தான்!'.. மிடில் ஆர்டர் செட் ஆனது எப்படி?.. ஃபுல் ஃபார்மில் இந்திய அணி!

ஆஸ்திரேலியாவிற்கு கிரிக்கெட் தொடர் ஆட செல்லும் இந்திய அணியின் பட்டியல் நேற்று வெளியானது. டிசம்பர் மாதம் நடக்க உள்ள இந்த தொடர், இந்திய அணி கலந்து கொள்ளப் போகும் மிக முக்கியமான தொடராக இருக்க போகிறது.

இந்த தொடரில் இந்திய அணி சார்பாக பல இளம் வீரர்கள் களமிறக்கப்பட உள்ளனர். ஐபிஎல் தொடரில் வீரர்கள் விளையாடிய விதம் காரணமாக பலர் இந்த முறை இந்திய அணிக்குள் தேர்வாகி உள்ளனர்.

உலகக் கோப்பை தொடருக்கு பின் சர்வதேச போட்டிகளில் ஆடாத தோனி கடந்த சில வாரங்கள் முன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று இருந்த தோனி ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 

இந்த நிலையில், இந்திய அணியின் புதிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் யார் என்று கேள்வி எழுந்தது. தோனியின் இடத்தை நிரப்ப போகும் வீரர் யார் என்று கேள்வி எழுந்தது. தோனியின் இடத்தை நிரப்ப பலருக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. மூத்த வீரர் தினேஷ் கார்த்திக் தொடங்கி இளம் வீரர் பன்ட் வரை பலர் தோனியின் இடத்தை நிரப்ப முயன்றனர். 

அதன்படி தினேஷ் கார்த்திக், பண்ட், கே. எல் ராகுல், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன் என்று பெரிய படையே தோனியின் இடத்தை நிரப்ப தீவிரமாக முயன்று வந்தது. இந்த பெரிய ரேஸில் தற்போது கே. எல் ராகுல் வெற்றிபெற்று உள்ளார். இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி 20 டீமில் தோனியின் இடத்தை நிரப்ப போகும் வீரர் கே. எல் ராகுல் தான். 

இவரின் ஐபிஎல் ஆட்டத்தை பார்த்து கோலி இவரை அணிக்குள் எடுத்துள்ளார். நேற்று ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியின் பட்டியல் வெளியானது. இதில் குறிப்பிட்டுள்ளபடி ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி 20 கீப்பர் கே. எல் ராகுல் தான். டி 20 டீமில் ராகுல் காயம் அடைந்தால், சஞ்சு சாம்சன் மாற்று வீரராக வருவார். ஆனால், ராகுல்தான் இந்திய அணியில் இனிமேல் முதல் தேர்வு என்பது உறுதியாகி உள்ளது. 

டெஸ்ட் அணியில் மட்டும் பண்ட் கீப்பராக இருப்பார். ஆனால், கே. எல் ராகுல் டெஸ்ட் அணியிலும் இடம்பிடித்து உள்ளார். இதன் மூலம் தோனியின் இடத்தை நிரப்ப போகும் வீரர் ராகுல் தான் என்பது உறுதியாகிவிட்டது. அதேபோல் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் ஒருநாள் மற்றும் டி 20யில் ஷ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டு இருக்கிறார். 

தற்போது ரோஹித் இல்லாத காரணத்தால் ராகுல், தவான் ஓப்பனிங் இறங்குவார்கள். கோலி மூன்றாம் இடத்திலும், ஷ்ரேயாஸ் நான்காவது இடத்திலும் இறங்குவார். ரோஹித் வந்த பின் ரோஹித், தவான் ஓப்பனிங் செய்வார்கள். அதன்பின் கோலி, ராகுல், ஷ்ரேயாஸ் என்று பேட்டிங் ஆர்டர் இருக்கும். அதன்பின் ஹர்திக், ஜடேஜா இறங்க வாய்ப்புள்ளது. இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் மிகவும் வலிமையானதாக இருக்கும்.

மற்ற செய்திகள்