‘பௌலிங்கில் மாஸ் காட்டிய சிஎஸ்கே வீரர்’.. ஹாட்ரிக் வெற்றியை பெற்ற இந்தியா..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 தொடரை இந்தியா வென்று கோப்பை கைப்பற்றியுள்ளது.

‘பௌலிங்கில் மாஸ் காட்டிய சிஎஸ்கே வீரர்’.. ஹாட்ரிக் வெற்றியை பெற்ற இந்தியா..!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று கயானா நகரில் உள்ள ப்ரோவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் ரோஹித் ஷர்மா மற்றும் ஜடேஜாவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. அதனால் தொடக்க ஆட்டக்காரராக கே.எல்.ராகுல் களமிறங்கினார். மேலும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியில் விளையாடிய தீபக் சஹார், மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய ராகுல் சஹார் போன்ற இளம் வீரர்களுக்கு புதிதாக வாய்ப்பு அளிக்கப்பட்டது.

மழையின் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அண்யின் கேப்டன் விராட் கோலி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 146 ரன்களை எடுத்தது. இந்திய அணியின் சார்பாக தீபக் சஹார் 3 விக்கெட்டுகளையும், நவ்தீப் சைனி 2 விக்கெட்டுகளையும், ராகுல் சஹார் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணி 19.1 ஓவர்களின் முடிவில் 150 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 3-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸை வொய்ட் வாஷ் செய்து தொடரை வென்றது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 65 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும் எடுத்தனர்.

BCCI, VIRATKOHLI, INDVWI, T20I, CHAHAR, RISHABH PANT