யாருப்பா நீ..! முக்கியமான மேட்ச்ல எல்லாம் இந்தியாவுக்கு ஆப்பு வச்ச ‘ஒரே’ வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது.
இதனை அடுத்து இன்று (21.01.2022) இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 287 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 85 ரன்களும், கே.எல்.ராகுல் 55 ரன்களும், ஷர்துல் தாகூர் 40 ரன்களும் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் எடுத்தது. இதனால் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மாலன் 91 ரன்களும், டி காக் 78 ரன்களும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றிபெற அந்த அணியின் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன் முக்கிய காரணமாக இருந்தார். 37 ரன்கள் எடுத்த அவர் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெற வைத்தார். அதேபோல் இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இக்கட்டான சூழலில் 41 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தார். அதனால் வெற்றி பெற வேண்டிய டெஸ்ட் தொடரை இந்தியா நழுவவிட்டது. தற்போது 2-வது ஒருநாள் போட்டியில் தோல்வி அடைந்ததன் மூலம் ஒருநாள் தொடரையும் இந்தியா தக்க வைக்க தவறியது என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்