'அடுத்த' தோனியை கழட்டிவிட்டு... 'சின்னப்பையனை' ஓபனிங் இறக்கிவிட... 'ஸ்கெட்ச்' போடும் கேப்டன்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நாளை நடக்கவிருக்கும் முதலாவது ஒருநாள் போட்டியில், இளம்வீரர் பிரித்வி ஷாவை ஓபனிங் இறக்கி விடுவதற்கு கேப்டன் கோலி திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

'அடுத்த' தோனியை கழட்டிவிட்டு... 'சின்னப்பையனை' ஓபனிங் இறக்கிவிட... 'ஸ்கெட்ச்' போடும் கேப்டன்?

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டி நாளை இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. கடைசியாக நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி டி20 தொடரை மட்டுமே வென்றது. ஒருநாள் தொடர், டெஸ்ட் தொடர் இரண்டையும் இழந்தது.

இதனால் தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான இந்த ஒருநாள் போட்டி முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன் தவானுடன் இணைந்து பிரித்வி ஷா களமிறங்கலாம் என கூறப்படுகிறது. மற்றொரு ஓபனிங் பேட்ஸ்மேனான ரோஹித் இன்னும் அணிக்கு திரும்பவில்லை என்பதால் கோலி இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்திய உத்தேச அணி விவரம்:

ஷிகர் தவான், பிரித்வி ஷா, விராட் கோலி (கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஸ்வர் குமார், நவ்தீப் சைனி, யஷ்வேந்திர சாஹல், ஜஸ்பிரிட் பும்ரா.