ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்... சும்மா தெறிக்கவிட்ட ஹிட்மேன்... இந்திய வீரராக புதிய சாதனை!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 போட்டியில் நியூசிலாந்து வீரர்களை தெறிக்கவிட்ட ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

ஒரே ஓவரில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்... சும்மா தெறிக்கவிட்ட ஹிட்மேன்... இந்திய வீரராக புதிய சாதனை!

இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டனில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இந்தியாவின் ரோகித் சர்மா, கே.எல். ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஐந்து ஓவரில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், 6-வது ஓவரை பென்னெட் வீசினார்.

இந்த ஓவரில் 5 பந்துகளில் ரோகித் சர்மா மூன்று சிக்ஸ், இரண்டு பவுண்டரிகள் விரட்டி நியூசிலாந்து வீரர்களை அதிரவைத்தார். அத்துடன் ரோகித் சர்மா 23 பந்தில் அரைசதம் அடித்தார். 9 ஓவரில் 89 ரன்கள் எடுத்திருக்கும்போது கேஎல் ராகுல் 19 பந்தில் 27 ரன்கள்  எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்காக கேப்டன் விராத் கோலிக்கு பதிலாக 3-வது வீரராக ஷிவம் துபே களம் இறக்கப்பட்டார்.

ஆனால் பென்னெட் வீசிய 11-வது ஓவரில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் ரோகித் சர்மா 40 பந்தில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 6-வது பந்தில் துபே 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் விராத் கோலியின் திட்டம் தோல்வியில் முடிந்ததால், இந்தியாவின் ஸ்கோர் அப்படியே சரிய ஆரம்பித்தது. 15 ஓவரில் 127 ரன்களே எடுக்க முடிந்தது. 36 பந்தில் 38 ரன்களே கிடைத்தது.

எனினும் 65 ரன்கள் சேர்த்து அவுட்டான ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, 3 வடிவ கிரிக்கெட்டிலும், தொடக்க ஆட்டக்காரராக 10,000 ரன்கள் என்ற புதிய மைல்கலை எட்டினார். இதன்மூலம் சுனில் கவாஸ்கர், சச்சின் , சேவாக்கிற்கு அடுத்து இந்த இலக்கை எட்டிய 4-வது இந்திய வீரார் ஆனார் ரோகித். மேலும் சர்வதேச அளவில், அதிவேகமாக 10,000 ரன்களை கடந்த வீரர்களில் இந்தியாவின் சச்சினுக்கு (214 இன்னிங்ஸ்), அடுத்த இடம் பெற்றார் ரோகித் சர்மா (219).

VIRENDHARSHEWAG, ROHIT SHARMA, OVERS, SACHIN TENDULKAR