'அவர்' மட்டும் இல்லன்னா... மானம் 'கப்பலேறி' இருக்கும்... 'சின்னப்பையனை' புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் இந்திய அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக கேப்டன் விராட் கோலி, பவுலர் ஜஸ்பிரிட் பும்ரா இருவரும் தான் இந்த தோல்விக்கு காரணம் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர். அதே நேரம் இந்திய அணியின் இளம்வீரர்களில் ஒருவரான ரிஷப் பண்டை இந்திய ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

'அவர்' மட்டும் இல்லன்னா... மானம் 'கப்பலேறி' இருக்கும்... 'சின்னப்பையனை' புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!

முதல் இன்னிங்ஸில் 19 ரன்கள், 2-வது இன்னிங்ஸில் 25 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் இந்திய அணியின் மானத்தையும் காப்பாற்றி இருக்கிறார். 2-வது இன்னிங்ஸில் இந்திய அணியின் டாப் வீரர்கள் அனைவரும் அவுட் ஆனாலும், மறுபுறம் நிலைத்து நின்ற ரிஷப், இஷாந்த் சர்மாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஒருசில பவுண்டரிகளை அடித்தார். இதனால் இந்திய அணி 191 ரன்களை எடுத்தது. இது நியூசிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 8 ரன்கள் அதிகம்.

இதனால் நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு 9 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது. இதை நியூசிலாந்து அணி 1.4 ஓவர்கள் எட்டினாலும், இந்த 8 ரன்கள் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியில் இருந்து தப்பித்தது. இதுதவிர இஷாந்த் சர்மா எடுத்த 12 ரன்களும் இதற்கு மற்றொரு முக்கிய காரணமாகும். இதைப்பார்த்த கிரிக்கெட் ரசிகர்கள் ரிஷப் இதேபோல பொறுமையாக ஆடினால் இந்திய அணியில் அவருக்கு சிறப்பான எதிர்காலம் காத்திருக்கிறது என சமூக வலைதளங்களில் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.