நம்பி உன்ன 'டீம்ல' எடுத்ததுக்கு... நியூசிலாந்தின் வெற்றியை 'உறுதிப்படுத்திய' இந்திய வீரர்...கொந்தளிக்கும் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇன்று நடைபெற்ற இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி இந்திய அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்தது. 48.1 ஓவர்களில் 348 ரன்கள் எடுத்து அபார வெற்றியை நியூசிலாந்து அணி ருசி பார்த்துள்ளது.
நியூசிலாந்து அணியின் இந்த வெற்றிக்கு கடைசிவரை களத்தில் நின்ற ராஸ் டெய்லர்(108*) தான் காரணம். நியூசிலாந்து அணியின் இந்த வெற்றிக்கு கடைசிவரை களத்தில் நின்ற ராஸ் டெய்லர்(108*) தான் காரணம். தொடக்கத்தில் அவர் கொடுத்த கேட்சை குல்தீப் யாதவ் தவற விட்டார். இதேபோல மற்றுமொரு கேட்சை கே.எல்.ராகுல் தவற விட்டார். இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட டெய்லர் ருத்ரதாண்டவம் ஆடி விட்டார்.
Bring back chahal in place of kuldeep
Bring Navdeep in place of shardul
Why kedar was given a go if was not to bowl?
Manish is way better..remember he fields way better than all these ..and we need him for 50 overs on the field.
— Ankit Dadheech (@dadheechankit1) February 5, 2020
மறுபுறம் 10 ஓவர்கள் முழுவதுமாக பந்து வீசிய குல்தீப் 2 விக்கெட்டுகளை எடுத்து அதிகபட்சமாக 84 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான சாதனை புரிந்தார். இதனால் வருகின்ற மேட்சில் குல்தீப், ஷர்துல் இருவரையும் நீக்கிவிட்டு அவர்களுக்கு பதிலாக சைனி, சாஹல் இருவருக்கும் வாய்ப்பு அளிக்கும்படி ரசிகர்கள் விராட் கோலிக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
24 runs in wides! 13 wides from Bumrah.
2 dropped catches of Taylor by Kuldeep and Rahul.
And THAT 22 run Shardul over :(
Taylor-made win for Nz!
And New Zealand knew there is no super over. #NZvIND #INDvNZ #RossTaylor
— Kaushal Baid (@crickaushal168) February 5, 2020
இது மட்டுமின்றி இன்றைய போட்டியில் 24 வைடுகள் உட்பட மொத்தம் 29 ரன்களை எக்ஸ்ட்ராவாக இந்திய அணி விட்டுக்கொடுத்ததும், மோசமான பீல்டிங்கும் இந்த தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியிருக்கிறது.