நியூசிலாந்து தொடரில்... மற்றொரு நட்சத்திர வீரரும்... விளையாடுவதில் சந்தேகம்... சோகத்தில் ரசிகர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரானப் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விலகியுள்ள நிலையில், மற்றொரு வீரரும் காயம் காரணமாக விலக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது ஷிகர் தவான் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து ஷிகர் தவான் அழைத்துச் செல்லப்பட்டார். இந்திய அணி பேட்டிங்கின் போதும் ஷிகர் தவான் களமிறங்கவில்லை. ஷிகர் தவானுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவரின் தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதனால் சில வாரங்கள் ஷிகர் தவான் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து அவர் நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஆறு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.
அவருக்கு கிரேடு 3 காயம் இருப்பதால், அவர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமிக்கு சென்று சிகிச்சை மேற்கொள்ள உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், இஷாந்த் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 31 வயதாகும் இஷாந்த் சர்மா இதுவரை இந்திய அணிக்காக 96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து தவான் மற்றும் இஷாந்த் சர்மா விலகியுள்ளது இந்திய அணிக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.