VIDEO: பரபரப்பாக போய்ட்டு இருந்த மேட்ச்.. திடீரென ‘ஷூ’, செருப்புகளை தூக்கிக் காட்டிய ரசிகர்கள்.. ஏன் அப்படி பண்ணாங்க..?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து ரசிகர்கள் ஒட்டுமொத்தமாக செருப்பை தூக்கி காட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

VIDEO: பரபரப்பாக போய்ட்டு இருந்த மேட்ச்.. திடீரென ‘ஷூ’, செருப்புகளை தூக்கிக் காட்டிய ரசிகர்கள்.. ஏன் அப்படி பண்ணாங்க..?

இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் ஒரு வீரர் கூட 20 ரன்களை தாண்டவில்லை. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் கிரேக் ஓவர்டன் தலா 3 விக்கெட்டுகளும், ராபின்சன் மற்றும் சாம் கர்ரன் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

IND vs ENG: Why all the fans shoes off at Leeds Test?

தற்போது இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோரி பர்ன்ஸ் மற்றும் ஹசீப் ஹமீது ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடினர். இதில் ரோரி பர்ன்ஸ் 61 ரன்களும், ஹசீப் ஹமீது 68 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த டேவிட் மாலன் மற்றும் கேப்டன் ஜோ ரூட் கூட்டணி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்த ஜோடியை நீண்ட நேரமாக இந்திய அணியால் பிரிக்க முடியவில்லை.

இதில் ஜோ ரூட் 121 ரன்கள் அடித்து தனது சதத்தை பதிவு செய்தார். அதேபோல் டேவிட் மாலனும் 70 ரன்கள் அடித்து அசத்தினார். இதுவரை வரை 7 விக்கெட் இழப்புக்கு 392 ரன்களை இங்கிலாந்து குவித்துள்ளது. தற்போது சாம் கர்ரனும், கிரேக் ஓவர்டனும் பேட்டிங் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் இப்போட்டியின் இடையே திடீரென ரசிகர்கள் அனைவரும் தங்களது ஷூ, செருப்புகளை தூக்கி காட்டினர். அதற்கு காரணம் ரசிகர் ஒருவர், ‘ஜோ ரூட்டை விரும்புவர்கள் தங்களது ஷூவை கழற்றி தூக்கிக் காட்டுங்கள்’ என கூறினார். உடனே ரசிகர்கள் அனைவரும் தங்களது காலணிகளை கழற்றி அதேபோல் கோஷங்களை எழுப்பினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்