‘இப்ப வரைக்கும் அவர் தான் எங்க கேப்டன்’... ‘அந்த சீனியர் வீரர் இல்லாமல் மிஸ் பண்றோம்’... ‘வெளிப்படையாக பேசிய துணை கேப்டன்’...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் துவங்க உள்ளநிலையில், இந்திய அணியின் துணை கேப்டன் ரஹானே பேட்டியளித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான முதல் டெஸ்ட் தொடர், வரும் 17 ஆம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியுடன் குழந்தை பிறப்பதையொட்டி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி நாடு திரும்புகிறார். இதையடுத்து மீதமுள்ள 3 போட்டிகளில் துணை கேப்டன் ரஹானே கேப்டனாக பொறுப்பு வகிக்க உள்ளார். இதனையொட்டி, துணை கேப்டன் ரஹானே, கிரிக்கெட் இணையதளம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.
அதில், ‘நாளையை தினத்தை பற்றி நான் யோசித்ததில்லை. இப்போது எங்களை பொறுத்தவரை கோலிதான் கேப்டன். முதல் டெஸ்ட் போட்டியை மட்டும்தான் யோசித்து வருகிறோம். கோலி இந்தியாவுக்கு திரும்பிய பின்புதான் அடுத்த டெஸ்ட் போட்டி குறித்து திட்டமிடுவோம். பகலிரவு போட்டி சவாலானது. பகலில் ஒரு மாதிரியாகவும் லைட்ஸ் போட்ட பின்பு இரவில் வேறு மாதிரியாகவும் பிங்க் நிறப் பந்து செயல்படும். இதனால் கவனமாக விளையாட வேண்டும்.
கடந்த 2018 ஆம் ஆண்டு நாங்கள் (இந்திய அணி) ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் மேற்கொண்ட போது விக்கெட்களை வீழ்த்த கடுமையாகப் போராட வேண்டியது இருந்தது. இருப்பினும், அதைச் சாத்தியப்படுத்தினோம். பேட்டிங்கை பொறுத்தவரை இந்திய அணி வலுவாக உள்ளது. பவுன்சர் பந்துகளைப் பற்றி நாங்கள் கவலைப்படப் போவதில்லை. நேர்மறை சிந்தனையுடன் பேட்ஸ்மேன் இருக்கும்போது எதுவும் தடையாக இருக்காது. பந்துவீச்சிலும் நாங்கள் வலுவாகத்தான் இருக்கிறோம்.
இஷாந்த் ஷர்மா இல்லாதது வருத்தமான செய்திதான். அவர் இருந்தால் நிச்சயம் இந்திய அணிக்குக் கூடுதல் பலமாக இருந்திருக்கும். அவர் அனுபவ வீரர். நிலைமைக்கு ஏற்றார்போல் பந்துவீசக் கூடியவர். பும்ரா, ஷமியோடு, உமேஷ் யாதவ், சிராஜ், சைனி ஆகியோர் இருக்கிறார்கள். அவர்கள் அனுபவம் மிக்கவர்கள் மட்டுமின்றி, இங்கிருக்கும் சூழலுக்கு ஏற்றவாறு பந்து வீசத் தெரிந்தவர்கள்.
கூட்டணியாகப் பந்து வீசவேண்டியது அவசியம். ஒரு பேட்ஸ்மேனாகவும், பந்து வீச்சாளராகவும் அஸ்வினின் பங்கு முக்கியமானதாக இருக்கும். அவர் அனுபவம் மிக்கவர். அவருக்கு இது நல்ல தொடராக அமையும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்’ இவ்வாறு கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்