'பார்த்துட்டோம் யா... 'அந்த மனுஷன' உன்னோட ரூபத்தில பார்த்துட்டோம்'!.. 'ஜட்டு ஆல்ரவுண்டர் மட்டுமா'?.. 'இல்ல... அதுக்கும் மேல'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே ஆன மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 300 ரன்களை தாண்டுவது சாத்தியமே இல்லை என்ற நிலை இருந்தது. ஆனால் தன் அதிரடி ஆட்டம் மூலம் அதை மாற்றினார் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா.

'பார்த்துட்டோம் யா... 'அந்த மனுஷன' உன்னோட ரூபத்தில பார்த்துட்டோம்'!.. 'ஜட்டு ஆல்ரவுண்டர் மட்டுமா'?.. 'இல்ல... அதுக்கும் மேல'!!

தோனி ஸ்டைலில் ஆடிய அவர் இந்தியாவின் புதிய பினிஷர் என்ற அடையாளத்தை மீண்டும் ஒரு முறை நிரூபித்தார்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தவான் 16, ஷுப்மன் கில் 33, ஸ்ரேயாஸ் ஐயர் 19, ராகுல் 5 ரன்கள் மட்டுமே எடுத்தனர். விராட் கோலி போராடி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்திய அணி 32 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 152 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. அப்போது ஹர்திக் பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்தார் ஜடேஜா.

பாண்டியா முன்பு போல அனைத்து பந்துகளையும் சிக்ஸ் அடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆடாமல் முதிர்ச்சியுடன் ஆடினார். ஜடேஜா மிகவும் நிதான ஆட்டம் ஆடி வந்தார். பாண்டியா அரைசதம் கடந்த பின் சற்று வேகம் எடுத்தார்.

ஆனால், ஜடேஜாவின் நிதானத்தால் இந்திய அணி 45 ஓவர்கள் முடிவில் 226 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தது. ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே ரன் ரேட் இருந்தது. இந்திய அணி 280 ரன்களை தொட்டாலே பெரிது என்ற நிலையே இருந்தது.

அப்போது ஜடேஜா தன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 45 ஓவர்கள் முடிவில் 25 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்த ஜடேஜா 50 ஓவர்கள் முடிவில் 66 ரன்கள் சேர்த்தார்.

48வது ஓவரில் மட்டும் மூன்று ஃபோர், ஒரு சிக்ஸ் அடித்தார் ஜடேஜா. அந்த ஓவரில் இந்திய அணி 19 ரன்கள் எடுத்தது. கடைசி 5 ஓவர்கள் வரும் வரை நிதான ஆட்டம் ஆடிய ஜடேஜா அதன் பின் அதிரடி ஆட்டத்தால் மிரள வைத்தார். 

இது தோனியின் பினிஷிங் ஸ்டைல். அதை அப்படியே பின்பற்றினார் ஜடேஜா. ரசிகர்கள் சிலர் சிஎஸ்கே அணியில் ஜடேஜா எடுத்த பயிற்சி தான் என்றும் கூறினார்கள். ஜடேஜா 2019 உலகக்கோப்பை தொடரின் அரை இறுதியிலும் இதே போன்ற அசத்தல் ஆட்டம் ஆடி, தான் ஒரு பினிஷர் என்பதை வெளிப்படுத்தி இருந்தார்.

 

மற்ற செய்திகள்