"'ஃபேன்ஸ்' கிட்ட சொன்ன மாதிரியே சிறப்பா செஞ்சுட்டாரே.." 'தாஹிர்' செயலால் நெகிழ்ந்து போன 'சிஎஸ்கே' 'ரசிகர்கள்'.. மீண்டும் வைரலான 'ட்வீட்'!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் (Imran Tahir), ஐபிஎல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் ஆடி வருகிறார்.

"'ஃபேன்ஸ்' கிட்ட சொன்ன மாதிரியே சிறப்பா செஞ்சுட்டாரே.." 'தாஹிர்' செயலால் நெகிழ்ந்து போன 'சிஎஸ்கே' 'ரசிகர்கள்'.. மீண்டும் வைரலான 'ட்வீட்'!!

சென்னை அணிக்காக, தனது சுழற்பந்து வீச்சில், மிகப்பெரிய பங்காற்றியுள்ள தாஹிருக்கு கடந்த ஐபிஎல் சீசனில் 3 போட்டிகளில் மட்டுமே ஆட வாய்ப்பு கிடைத்தது. இதனிடையே, இந்த சீசனுக்கு முன்பாக, இங்கிலாந்து ஆல் ரவுண்டர் மொயின் அலியை (Moeen Ali), சென்னை அணி ஏலத்தில் எடுத்திருந்தது.

அதன்படி, முதல் போட்டியில் இருந்தே சென்னை அணிக்காக ஆடி வரும் மொயின் அலி, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தி வருகிறார். மொயின் அலி சுழற்பந்து வீச்சாளர் என்பதால், அது மட்டுமில்லாமல், அவர் நல்ல பார்மிலும் இருந்ததால், இந்த சீசனிலும் இம்ரான் தாஹிருக்கு அதிக போட்டிகளில் வாய்ப்பு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ரசிகர் ஒருவர், இம்ரான் தாஹிரிடம், 'நீங்கள் சென்னை அணியில் களமிறங்குவதை எப்போது பார்க்கலாம்?' என ட்வீட் செய்து கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த இம்ரான் தாஹிர், தற்போது சென்னை அணியில் சிறந்த வீரர்கள் உள்ளதாகவும், அவர்கள் நல்ல பங்களிப்பதை அளித்து வருவதால், அவர்கள் தான் தொடர்ந்து ஆட வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

மேலும், எனக்கு என்ன தேவை என்பதை விட, அணிக்கு இப்போது என்ன தேவை என்பது தான் முக்கியம் என்றும், அதனைத் தாண்டி வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில், நிச்சயம் அணிக்காக சிறந்த பங்களிப்பை கொடுப்பேன் என்றும் இம்ரான் தாஹிர் குறிப்பிட்டிருந்தார்.

 

சென்னை அணி பற்றி, இவ்வளவு நெகிழ்ச்சியாக இம்ரான் தாஹிர் குறிப்பிட்ட நிலையில், இந்த ட்வீட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலானது. இதனையடுத்து, மொயின் அலி காயமடைந்ததால், பெங்களூர் அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற போட்டியில், இம்ரான் தாஹிருக்கு வாய்ப்பு கிடைத்தது. ரசிகரின் கேள்விக்கு தாஹிர் பதில் சொன்னது போலவே, தனக்கு கிடைத்த வாய்ப்பை அணிக்கு வேண்டி, மிக சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார்.

நேற்றைய போட்டியில், 4 ஓவர்கள் பந்து வீசிய இம்ரான் தாஹிர், 16 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 42 வயதாகும் இம்ரான் தாஹிர், தான் கூறியதை போலவே, செய்தும் காட்டியுள்ளதால், அவருக்கு சிஎஸ்கே ரசிகர்கள் மீண்டும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்