'தென் ஆப்ரிக்க வீரர் நாளையுடன் ஓய்வு'... 'ரசிகர்கள் கவலை!'

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

தென் ஆப்ரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிருக்கு, நாளை மான்செஸ்டரில் நடக்கும் சர்வதேச ஒருநாள் போட்டியே, கடைசி ஆக இருக்கும் என்பதால் ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

'தென் ஆப்ரிக்க வீரர் நாளையுடன் ஓய்வு'... 'ரசிகர்கள் கவலை!'

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. பரபரப்பாக நடைப்பெற்று வந்த லீக் ஆட்டங்கள் நாளையுடன் முடிவடைய உள்ளன. இந்நிலையில், 2019 உலகக் கோப்பை தொடர் முடிந்த உடன் சர்வதேச ஒரு நாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக, ஏற்கனவே தென் ஆப்ரிக்க சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் தெரிவித்திருந்தார். 

அதன்படி, நாளை மான்செஸ்டரில் ஆஸ்திரேலியாவுடன், தென் ஆப்பிரிக்கா அணி மோதவுள்ளது. இதுவே இம்ரான் தாகிருக்கு கடைசிப் போட்டியாகும். ஏனெனில்,  தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதிக்கு தகுதிப்பெறவில்லை. இம்ரான் தாகிருக்கு இது கடைசிப் போட்டி என்பதால், மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் மூத்த சுழற்பந்து வீச்சாளரான இம்ரான் தாகிருக்கு 40 வயதாகிறது. இவர், கடந்த 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.