'பணத்த' அதிகமா வச்சிட்டு 'இந்தியா' ஓவரா ஆட்டம் போடுது...! எங்கக்கிட்ட பண்ண மாதிரி 'அவங்க' கிட்ட நடந்துக்க முடியுமா...? - தாறுமாறாக 'கிழித்து' தொங்கவிட்ட இம்ரான் கான்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகடந்த மாதம் பாகிஸ்தானுக்கு சுற்று பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி கிரிக்கெட் தொடரை கூட தொடங்காமல் பாகிஸ்தானில் பாதுகாப்பு இல்லை என கூறி அவரச அவரசமாக பாகிஸ்தானில் இருந்து கிளம்பியது.
இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. நியூசிலாந்த்தின் இந்த செயலுக்கு இந்தியா தான் முக்கிய காரணம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும், பாகிஸ்தான் அரசியல் தலைவர்களும் இந்தியாவை குற்றம் சாட்டினார்.
அதோடு, நியூசிலாந்தை தொடர்ந்து இங்கிலாந்து கிரிக்கெட் அணியும் பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரில் இருந்து விலகியது. இதனால் கடுப்பான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மன் ரமீஸ் ராஜா இந்தியாவை குறித்து செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.
அதில், 'இப்போது நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் பார்த்தால், இந்தியா நினைத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஒன்றுமில்லாமல் செய்து விட முடியும். அதைத்தான் இந்தியா எதிர் பார்க்கிறது.' எனக் கூறியிருந்தார்.
இவர் மட்டுமல்லாது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மிடில் ஈஸ்ட் ஐ என்ற ஊடகத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்தியாவை கடுமையாக சாடியுள்ளார்.
அந்தப் பேட்டியில் 'நியூசிலாந்து பாகிஸ்தான் வந்து எங்களை ஏமாற்றியது. ஆனால், இங்கிலாந்து பாகிஸ்தான் வருவதையே விரும்பவில்லை. இதனால் இங்கிலாந்து தங்களைத் தாங்களே தாழ்த்திக் கொண்டது என்று தான் சொல்வேன்.
பாகிஸ்தானுடன் ஆடுவதன் மூலம் இந்த நாட்டுக்கு ஏதோ பெரிய சாதகம் செய்து விடும் நினைப்பில்தான் இங்கிலாந்து போன்ற நாடுகள் இன்னமும் கருதுகின்றன. இதற்கெல்லாம் முக்கிய காரணம் பணமும், பணத்தை வைத்துள்ள இந்தியாவும் தான்.
பணம் தான் கிரிக்கெட் உலகில் தலைவன். அந்த பணத்தையே இந்திய கிரிக்கெட் வாரியம் ஆள்கிறது, அதனால் உலக கிரிக்கெட்டை இந்தியா ஆள்வது தான் விஷயம்.
பாகிஸ்தானை புறக்கணிப்பதை போன்று இந்தியாவைச் செய்ய இங்கிலாந்து, நியூசிலாந்துக்கு துணிச்சல் இருக்கிறதா என்றால் இல்லை. காரணம் பணம். இந்தியா நிறைய பணம் சம்பாதித்து கொடுக்கிறது' என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்