"'ரோஹித்' மட்டும் அந்த 'ஒரு' விஷயத்த பண்ணிட்டாரு.. அதுக்கப்புறம் இருக்கு..." அக்தரின் கருத்தால் மீண்டும் எழுந்த 'பரபரப்பு'!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐபிஎல் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.

"'ரோஹித்' மட்டும் அந்த 'ஒரு' விஷயத்த பண்ணிட்டாரு.. அதுக்கப்புறம் இருக்கு..." அக்தரின் கருத்தால் மீண்டும் எழுந்த 'பரபரப்பு'!!!

முதலில் 3 ஒரு நாள் போட்டிகளும், அதனைத் தொடர்ந்து 3 டி 20 போட்டிகளும் நடைபெறவுள்ளது. அதன்பிறகு, இறுதியாக 4 டெஸ்ட் போட்டிகள் நடைபெறும். இதில் முதல் டெஸ்டில் மட்டுமே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பங்கேற்கவுள்ள நிலையில், தனது மனைவி அனுஷ்கா ஷர்மாவுக்கு குழந்தை பிறக்கவுள்ள காரணத்தால் அவர் இந்தியா திரும்பவுள்ளார்.

இதன் காரணமாக,மீதமுள்ள டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா இந்திய அணியை வழி நடத்தவுள்ளார். ஏற்கனவே இந்தமுறை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் மும்பை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இதில் ஐந்து முறையும் மும்பை அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவே செயல்பட்டிருந்தார். இதனால், டி 20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மாவை நியமிக்க வேண்டும் என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சோயிப் அக்தர், 'இந்தியா தயாரித்ததில் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மா. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் தன்னை ஒரு சிறந்த கேப்டனாக நிரூபிக்க ரோஹித்திற்கு கிடைத்துள்ள மிகப்பெரிய வாய்ப்பாகும். மொத்த உலகமே அவரை ஒரு சிறந்த பேட்ஸ்மேன் ஆகவும், கேப்டன் ஆகவும் பார்க்கக் காத்துக் கொண்டிருக்கிறது. அப்படி அவர் சிறப்பாக அணியை தலைமை தாங்கி வெற்றிப் பாதைக்கு அணியை வழிநடத்திச் சென்றால் நிச்சயம் இந்திய அணியின் கேப்டன் யார் என்பது கடும் விவாதமாகும்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்