சச்சின், கங்குலி எல்லாருமே பேசுனோம்.. ஆனா அவர் வேணவே வேணாம்னு.. கோலி சொல்லிட்டாரு.. உடைந்த ரகசியம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

பிசிசிஐ அமைப்பின் உயர்பதவியில் இருந்த வினோத் ராய் சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒரு மிகப்பெரிய ரகசியத்தை உடைத்துள்ளார். குறிப்பாக கோலி-கும்ப்ளே இடையில் என்ன நடந்தது என அவர் வெளிப்படையாக தெரிவித்து இருக்கிறார்.

சச்சின், கங்குலி எல்லாருமே பேசுனோம்.. ஆனா அவர் வேணவே வேணாம்னு.. கோலி சொல்லிட்டாரு.. உடைந்த ரகசியம்!

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,'' அணில் கும்ப்ளேவின் ஓராண்டு பதவி முடிந்ததும் அவரது பதவியை நீட்டித்திட பிசிசிஐ முடிவு செய்தது. ஆனால் கோலி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அப்போது நான் நீண்ட நேரம் கோலியுடன் பேசினேன். ஆனால் அவர் சமாதானம் ஆகவில்லை.இதைத்தொடர்ந்து சச்சின், கங்குலி ஆகியோரும் கோலியுடன் நீண்ட நேரம் பேசினர். ஆனால் எதற்கும் அவர் மசியவில்லை.

இதற்கு மத்தியில் அணில் கும்ப்ளே தானாகவே பதவி விலகிவிட்டார். இதனால் அவர்மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உண்டு. இந்த விவகாரம் இப்போது நடந்து இருந்தால் கங்குலி, கோலியின் கழுத்தில் வைத்து அழுத்தி கும்ப்ளே தான் பயிற்சியாளராக தொடர வேண்டும் என தெரிவித்து இருப்பார். ஆனால் அணிக்குள் அதனால் மிகப்பெரிய பிரச்சினை வெடித்து இருக்கும்,'' என தெரிவித்து இருக்கிறார்.

அணில் கும்ப்ளே தனது பதவியை ராஜினாமா செய்ததன் பின்னணியில் கோலி இருந்தார் என அப்போதே கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அணில் கும்ப்ளே பயிற்சியாளராக இருந்த தருணத்தில் இந்திய அணி மிகப்பெரிய அளவில் முன்னேற்றம் கண்டது என்பதையும் இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும்.