‘அந்த இளம் வீரர்’... 'பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலா இருக்க மாட்டாரு’... ‘அதனால சீனியர் வீரரை ஃபிளைட் பிடிச்சு அனுப்புங்க’... ‘முன்னாள் கேப்டன் கருத்து’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

காயம் காரணமாக நீக்கப்பட்ட முகமது ஷமிக்கு பதிலாக, இஷாந்த் சர்மாவை களமிறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

‘அந்த இளம் வீரர்’... 'பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலா இருக்க மாட்டாரு’... ‘அதனால சீனியர் வீரரை ஃபிளைட் பிடிச்சு அனுப்புங்க’... ‘முன்னாள் கேப்டன் கருத்து’...!!!

காயம் காரணமாக கடந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடாத இந்திய பௌலர் இஷாந்த் சர்மா தொடரிலிருந்து இடையிலேயே வெளியேறினார். இதையடுத்து பெங்களூருவில் உள்ள என்சிஏவில் சிகிச்சை பெற்று, உடற்தகுதிக்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இவருடன் ரோகித் சர்மாவும் பயிற்சிகள் மேற்கொண்டு வந்தார்.

இவர்கள் இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தனது பிட்னசை இஷாந்த் சர்மா நிரூபித்த நிலையிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் அவர் சேர்க்கப்படவில்லை. ரோகித் சர்மா மட்டும் டெஸ்ட் தொடரின் 3-வது மற்றும் 4-வது கடைசிப் போட்டியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அடிலெய்டில் நேற்று நடந்து முடிந்துள்ள ஆஸ்திரேலியாவிற்கு எதிரான பகலிரவு டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்து மோசமான சாதனை செய்துள்ளது. மேலும் இந்த போட்டியின்போது பௌலர் முகமது ஷமிக்கு வலது கையில் எலும்பு முறிவு  ஏற்பட்டுள்ளது.

‘If Ishant Sharma is fit, send him to Australia now,’: Sunil Gavaskar

இதையடுத்து அவர் அடுத்த 3 போட்டிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி இறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், ‘நவ்தீப் சைனி பயிற்சி போட்டியில் நன்றாக விளையாடினாலும், அவர்  ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எதிராக வலிமையான, அச்சுறுத்தலான பௌலிங்கை வெளிப்படுத்துவார் என்று தான் கருதவில்லை.

மாறாக, ஷமிக்கு பதிலாக,  இந்திய பௌலர் இஷாந்த் சர்மாவை உடனடியாக ஆஸ்திரேலியா வரவழைக்க வேண்டும்.  அங்கு குவாரன்டைனில் ஈடுபட செய்து, 3-வது போட்டியில் பங்கேற்கும் வகையில் செய்ய வேண்டும். ஏனெனில் அவர் ஒருநாளில் 20 ஓவர்கள் வரை கூட பந்துவீசும் திறமை உள்ளவர்.

இஷாந்த் மற்றும் ஷமி உள்ளிட்ட பௌலர்கள் இல்லையென்றால் அது ஆஸ்திரேலியாவிற்கு மேலும் சாதகமாக அமையும். இஷாந்த் சர்மா பிட்டாக இருக்கும்பட்சத்தில் அவரை உடனடியாக ஆஸ்திரேலியாவிற்கு இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வரவழைக்க வேண்டும்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்