'அவரு இல்லாம எப்படி இந்தியா ஜெயிக்கும்’... ‘அப்டி ஜெயிச்சா, நம்பமுடியாத வெற்றியாதான் இருக்கும்’... ‘முன்னாள் கேப்டன் சவால்’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, விராட் கோலி இல்லாத இந்திய அணி வெற்றிபெற்றால், ஓராண்டுக்கு அந்த வெற்றியைக் கொண்டாடலாம் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சவால் விடுத்துள்ளார்.

'அவரு இல்லாம எப்படி இந்தியா ஜெயிக்கும்’... ‘அப்டி ஜெயிச்சா, நம்பமுடியாத வெற்றியாதான் இருக்கும்’... ‘முன்னாள் கேப்டன் சவால்’...!!!

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, வரும் 17 ஆம் தேதி துவங்க உள்ள டெஸ்ட் தொடரில், ஒரு போட்டியில் மட்டுமே பங்கேற்றுவிட்டு அதன்பின் நாடு திரும்புகிறார். அவரின் மனைவிக்கு முதல் பிரசவம் என்பதால், பிசிசிஐ விடுப்பு வழங்கியுள்ளது.

இதையடுத்து, முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும், கோலி இல்லாத இந்திய அணியால், டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த முடியுமா, இந்தியாவின் தோல்வி எழுதப்பட்டுவிட்டது. இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால் காத்திருக்கிறது என்றெல்லாம் கருத்துகளையும், ஊகங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.

If India wins Test match against Aus without Kohli, they can celebrate

இந்நிலையில் இதே கருத்தை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்கும் முன்வைத்துள்ளார். இந்தியா டுடேவுக்கு, பேட்டி அளித்த அவர், “கேப்டன் விராட் கோலியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பது எனது கருத்து. கேப்டன் பொறுப்பிலும் சரி, பேட்டிங்கிலும் சரி, கோலி இல்லாவிட்டால் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்படும்.

விராட் கோலி இல்லாத குறையை எந்த பேட்ஸ்மேன் நிரப்புவார் என்பது வரும் டெஸ்ட் தொடரில் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒருவேளை விராட் கோலி இல்லாமல், டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்திவிட்டால், ஓராண்டுக்கு இந்திய அணியின் வெற்றியைக் கொண்டாடலாம். உண்மையில் அதுபோன்ற வெற்றி, நம்பமுடியாத வெற்றியாகத்தான் இருக்கும்.

If India wins Test match against Aus without Kohli, they can celebrate

கே.எல்.ராகுல் சிறந்த வீரர், அறிவார்ந்தவர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்திரேலியாவில் இதற்கு முன் ராகுல் விளையாடிய அனுபவத்தைப் பெற்றுள்ளார். அவரால் டெஸ்ட் தொடரில் சிறப்பாகச் செயல்பட முடியும்.

ஆனால், விராட் கோலியின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனக்கு ரஹானேவை மிகவும் பிடிக்கும். அவர் சிறந்த வீரர். அவரது கேப்டன்ஷிப்பும் நன்றாக இருக்கும். கேப்டன்ஷிப்பைப் பொறுத்தவரை ரஹானே சிறப்பாகச் செயல்படக்கூடியவர். இந்திய அணிக்கு அது சாதகமான விஷயம்தான். ரஹானே எவ்வாறு செயல்படுவார் என்பதைக் காண வாய்ப்பு கிடைத்துள்ளது. சிறப்பாக முயன்றால், வரலாறு படைக்க முடியும்.

If India wins Test match against Aus without Kohli, they can celebrate

இதே நம்பிக்கையுடன் டெஸ்ட் தொடரை இந்திய வீரர்கள் அணுக வேண்டும். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தும் அளவுக்குப் போதுமான அளவு திறமை இருக்கிறது என்று நம்ப வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்