அந்த சீரிஸ்ல 'கோலி' சொதப்பிட்டாரு... அப்போ 'தோனி' மட்டும் கூட இல்லன்னா... கோலி கிரிக்கெட் வாழ்க்க அவ்ளோதான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2014 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடரின் போது தடுமாறிய விராட் கோலிக்கு தோனி பக்கபலமாக இருந்ததாக இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்ஷ்மணுடன் கவுதம் காம்பீர் கலந்து கொண்டார். அப்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு இந்திய அணி விளையாடிய போட்டிகளை குறித்து பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து காம்பீர் கூறுகையில், 'அந்த சுற்றுப்பயணம் மிகவும் மோசமாக இருந்தது. இந்திய அணியில் நானும் அப்போது இடம் பெற்றிருந்தேன். அந்த தொடரின் போது இந்திய வீரர் விராட் கோலி 10 இன்னிங்ஸ்களில் மொத்தம் 134 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அந்த சுற்றுப்பயணத்துடன் கோலி உட்பட பல வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கை அத்துடன் முடிந்திருக்கும். ஆனால் தோனி அணியின் பாதுகாப்பு அரணாக இருந்து அணி வீரர்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார்' என தெரிவித்தார்.
மேலும், 'அதன்பிறகு இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற தொடரில் பங்கேற்ற விராட் கோலி அந்த தொடர் முழுவதும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிலும் பிரம்மிங்காம் மைதானத்தில் அவர் அடித்த சதம் இன்னும் என்னால் மறக்க முடியாதது. அதன்பிறகு தான் கிரிக்கெட் உலகின் ஸ்டாராக கோலி மாறினார்' என காம்பீர் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்