'அவரா போறது நல்லது'...'தேர்வு குழு எடுக்க போகும் அதிரடி முடிவு'... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வை அறிவிக்கவில்லை என்றாலும், அவர் அணியில் தேர்வாவது கடினம் என தேர்வுக்குழு வட்டாரங்கள் கூறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'அவரா போறது நல்லது'...'தேர்வு குழு எடுக்க போகும் அதிரடி முடிவு'... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ரசிகர்களால் கேப்டன் கூல் என அன்புடன் அழைக்கப்படும் தோனி இந்திய அணிக்காக பல்வேரு வெற்றிகளை பெற்று தந்திருக்கிறார். கபில் தேவிற்கு பிறகு இந்திய அணி உலககோப்பையை கையில் ஏந்த முக்கிய காரணமாக அமைந்தவர் தோனி. இதனிடையே நடந்து முடிந்த உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி நிச்சயம் வெற்றி பெறும் எனவும், அதே உற்சாகத்தில் தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என ரசிகர்கள் பலரும் ஆர்வமுடன் காத்திருந்தார்கள்.

ஆனால்  நியூசிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில், இந்திய அணி 18 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த போட்டியில் தோனியின் ரன் அவுட் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதையடுத்து தோனி தனது ஓய்வை அறிவிக்க வேண்டும் என்ற சர்ச்சை மீண்டும் எழுந்தது. முன்னாள் வீரர்கள் சிலர் அவருக்கு ஆதரவாகவும் சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் தோனி அதுகுறித்து எதுவும் மனம் திறக்கவில்லை.

இதற்கிடையே 2020-ல் நடக்க இருக்கும் உலகக் கோப்பை டி20 தொடர் வரை தோனி விளையாடுவர் என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது '' தோனி ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்து விட்டது. அவருக்கு பின்னால் ரிஷாப் பன்ட் போன்ற இளம் வீரர்கள் காத்திருக்கிறார்கள். எனேவ தோனி, அவர்களுக்கு வழிவிட வேண்டும்.

உலகக்கோப்பையில் தோனியின் ஆட்டம் நன்கு கண்காணிக்கப்பட்டது. கடைசி கட்டத்தில் அவர் தடுமாறுகிறார். பந்துகளை எதிர்கொள்ள அவரால் முடியவில்லை. எனவே அவராகவே ஓய்வை அறிவிக்க வேண்டும்'' என அவர் கூறினார். இதனிடையே தேர்வு முறையில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தோனி ஓய்வை அறிவிக்காவிட்டாலும், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணம் உள்பட அடுத்தடுத்து வரும் தொடர்களில் அவர் இடம் பிடிப்பது கடினம் என தெரிகிறது. இதற்கிடையே இந்திய தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே பிரசாத், தோனியிடம் விரைவில் பேச இருக்கிறார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வுக்குழுவின் அதிரடி நடவடிக்கைகள் தோனியின் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

MSDHONI, CRICKET, BCCI, ICCWORLDCUP2019, ICCWORLDCUP, INDIAN CRICKET TEAM, M.S.K PRASAD