இதுமட்டும் நடக்காம இருந்திருந்தா.. ‘தோனி’ கண்டிப்பா டி20 உலகக்கோப்பை விளையாடி இருப்பாரு.. ‘எல்லாத்தையும் தலைகீழா மாத்திருச்சு’!.. முன்னாள் வீரர் சொன்ன தகவல்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டி20 உலகக்கோப்பை தொடரில் தோனி விளையாடியிருக்க வேண்டும் என தேர்வுக்குழு உறுப்பினர்கள் விரும்பியதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

இதுமட்டும் நடக்காம இருந்திருந்தா.. ‘தோனி’ கண்டிப்பா டி20 உலகக்கோப்பை விளையாடி இருப்பாரு.. ‘எல்லாத்தையும் தலைகீழா மாத்திருச்சு’!.. முன்னாள் வீரர் சொன்ன தகவல்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான தோனி, கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று சர்வதேச கிரிக்கெட் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தோனியின் இந்த திடீர் அறிவிப்பு அப்போது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி விளையாடி வருகிறார். இந்த நிலையில் கொரோனா பெருந்தொற்று மட்டும் வரவில்லை என்றால் டி20 உலகக்கோப்பையில் தோனி விளையாடி இருப்பார் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தேர்வுக்குழு உறுப்பினருமான சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

If COVID19 not happened, Dhoni would have played T20 World Cup

இதுகுறித்து பகிர்ந்த சரன்தீப் சிங், ‘நிச்சயமாக தோனி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் விளையாடி இருப்பார். ஆனால் கொரோனா அனைத்தையும் தலைகீழாக மாற்றிவிட்டது. தோனி மிகவும் ஃபிட்டான ஒரு வீரர். ஒரு போதும் அவர் பயிற்சிக்கு வராமல் இருந்ததில்லை. எல்லா நாள்களும் தீவிரமாக பயிற்சி செய்வார். காயம் காரணமாக எந்தவொரு போட்டியிலிருந்தும் அவர் விலகியதில்லை என்பதே அதற்கு உதாரணம்.

If COVID19 not happened, Dhoni would have played T20 World Cup

அவர் டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடி இருக்க வேண்டும். இப்போது உள்ள தேர்வுக்குழு உறுப்பினர்களின் விருப்பமும் இதுவாகத்தான் உள்ளது. “ரொம்ப அதிகமாக யோசிக்க வேண்டாம். சூழ்நிலையை புரிந்து கொண்டு அதற்கேற்றபடி முடிவுகளை எடுக்க வேண்டும்” என்பதுதான் வளர்ந்து வரும் வீரர்களுக்கு தோனி கொடுக்கும் அறிவுரை’ என சரன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

If COVID19 not happened, Dhoni would have played T20 World Cup

தோனி கடைசியாக 2019ம் ஆண்டு நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான உலகக்கோப்பை தொடரில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்