“நாங்க வேணா அம்பயர் அனுப்பட்டுமா”.. விராட் கோலி அவுட் சர்ச்சை.. பிசிசிஐயை கிண்டலடித்த நாடு..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் அம்பயர்கள் குறித்து ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் பிசிசிஐயை கிண்டலடித்து ட்வீட் போட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் லீக் போட்டி சனிக்கிழமை நடந்தது. அதில் பெங்களூரு அணியின் வீரர் விராட் கோலி அவுட்டான விதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அப்போட்டியின் 19-வது ஓவரின் பந்து ஒன்றை விராட் கோலி எதிர்கொண்டார். அப்போது பந்து பேடில் பட்டது போல தெரிந்தது. அதனால் களத்தில் உள்ள அம்பயர் எல்பிடபிள்யூ கொடுத்து விட்டார்.
இதை எதிர்த்து மூன்றாம் அம்பயரிடம் விராட் கோலி அப்பீல் செய்தார். ஆனால் டிவி திரையில் காட்சி தெளிவாக தெரியாத காரணத்தால் ஆன்பீல்ட் அம்பயர் முடிவையே சரி என மூன்றாம் அம்பயரும் கூறிவிட்டார். இதனை டுத்து கோபத்துடன் விராட் கோலி வெளியேறினார். அப்போது அவர் 48 ரன்கள் எடுத்திருந்ததால், ரசிகர்களிடையேவும் இந்த அவுட் விமர்சனத்துக்குள்ளானது.
ஆனாலும் அப்போட்டியில் மும்பை அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த நிலையில் விராட் கோலி அவுட் விவகாரத்தை வைத்து ஐஸ்லாந்து கிரிக்கெட் வாரியம் கிண்டலடித்து ட்வீட் செய்துள்ளது.
அதில், ‘பந்து இன்சைட் எட்ஜா அல்லது முதலில் பந்து பட்டது பேட்டிலா அல்லது பேடிலா என்பதை கணிப்பது ஆன் பீல்ட் அம்பயர்களுக்கு எளிதானதல்ல. ஆனால் டிவி அம்பயர்கள் அதை சரியாக கணிக்க வேண்டியது முக்கியம். அவர்கள்தான் சரியான முடிவை எடுக்க வேண்டும். ஸ்லோமோஷன் இருக்கிறது, அல்ட்ரா எட்ஜ் டெக்னாலஜி இருக்கிறது. அதைப் பயன்படுத்தி முடிவெடுக்க வேண்டும். பிசிசிஐ எங்களிடம் நன்கு பயிற்சி பெற்ற அம்பயர்கள் உள்ளனர். சொன்னால் உடனே கிளம்பி வருவார்கள்’ என கிண்டலாக பதிவிட்டுள்ளது. இதற்கு இந்திய ரசிகர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்