‘திரும்பவும் சர்ச்சையை கிளப்பிய’... ‘ஐசிசியின் லேட்டஸ்ட் ட்வீட்’... ‘வறுத்தெடுத்த சச்சின் ரசிகர்கள்’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் எனப்படும் ஐசிசி, சச்சின் மற்றும் பென் ஸ்டோக்சின் புகைப்படத்தை பகிர்ந்து, பதிவிட்டுள்ள ஒரு ட்வீட், மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பென் ஸ்டோக்ஸின் அபார ஆட்டத்தால், முதல் முறையாக இங்கிலாந்து அணி உலகக் கோப்பை வென்றது. அப்போது சச்சின் பென் ஸ்டோக்ஸ்-க்கு ஆட்டநாயகன் விருதை அளித்தார். அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த ஐசிசி, ‘எந்த காலத்திலும் தலைச் சிறந்த கிரிக்கெட் வீரருடன், சச்சின் உள்ளார்’ என குறிப்பிட்டு இருந்தது. அப்போதே அந்த கருத்து சர்ச்சையை கிளப்பியது. இந்திய ரசிகர்கள் ஐசிசி-யை வறுத்து எடுத்தனர்.
இந்நிலையில், ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரானப் போட்டியில், பென் ஸ்டோக்ஸ் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால், அந்த பழைய புகைப்படத்தை மீண்டும் ட்விட்டரில் குறிப்பிட்டு, ‘நாங்க முன்பே கூறினோமே’ என ஐசிசி குறிப்பிட்டுள்ளது. இது தான் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சச்சினை அவமானப்படுத்தும் வகையில் இது போன்ற கருத்தை ஏன் ஐசிசி மீண்டும், மீண்டும் கூறுகிறது என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் பொங்கி எழுந்துள்ளனர்.
Told you so 😉 https://t.co/b4SFcEVDWk
— ICC (@ICC) August 27, 2019
Just that you are saying so don't think that we are going to believe
Greatest cricketer of all time is @sachin_rt , rest everything starts after him in cricket world
Did you get it?
— Mr. Sethi (@sethisahab_) August 27, 2019
I think Sachin deserves more respect than this.. In the late 90s he shouldered the Entire Indian cricket team on his Own..countless times.. The only difference.. There wasn't any Twitter during that time..
— Thoukir Ahamed, MBBS (@thoukirkool007) August 27, 2019