பயிற்சி ஆட்டத்திலேயே இப்டி மாஸ் பண்றாரு..! உலகக்கோப்பையில் இவர எப்டி சமாளிக்கப் போறமோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநியூசிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியைத் தழுவியுள்ளது.
நியூஸிலாந்து மற்றும் இந்தியா இடையேயான முதல் பயிற்சி ஆட்டம் இன்று(25.05.2019) லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 39.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதில் அதிகபட்சமாக ஜடேஜா 54 ரன்களும், ஹர்திக் பாண்டியா 30 ரனகளும் எடுத்திருந்தனர். தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய தவான் மற்றும் ரோஹித் ஷர்மா சொற்ப ரன்னில் அவுட்டாகி வெளியேறினர். இதனை அடுத்து களமிறங்கிய விராட் கோலியும் 18 ரன்களில் அவுட்டாகினார். இதில் நியூஸிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் போல்ட் இந்திய அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனை அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து அணி 37.1 ஓவர்களின் முடிவில் 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக நியூஸிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் 67 ரன்களும், ராஸ் டெய்லர் 71 ரன்களும் எடுத்தனர்.
The wickets.
Trent Boult 3-1-14-3#WorldCup2019 #INDvsNZ pic.twitter.com/vUMLMxVCk9
— नीतिन (@avidmemer) May 25, 2019