‘தொடங்கியது உலகக்கோப்பை’.. முதல் ஓவரில் முதல் விக்கெட்டை எடுத்து அதிரடி காட்டிய சிஎஸ்கே வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் உலகக்கோப்பை போட்டி கோலகலமாக தொடங்கியுள்ளது.
12 -வது உலகக்கோப்பைத் தொடர் இன்று இங்கிலாந்து கோலகலமாக தொடங்கியுள்ளது. இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் உலகக்கோப்பை போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறகிறது. இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்ட்டோ, ஜோஸ் பட்லர், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்கள் உள்ளனர். இது இங்கிலாந்து அணிக்கு பெரிய பலமாக கருதப்படுகிறது.
அதேபோல் தென் ஆப்பிரிக்காவில் டி காக், டு பிளிஸிஸ் டேவிட் மில்லர், ரபடா, லுங்கி நிகிடி, இம்ரான் தாகீர் போன்ற நட்சத்திர வீரர்கள் உள்ளனர். இதில் டு பிளிஸிஸ் மற்றும் இம்ரான் தாகீர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சார்பாக விளையாடியுள்ளனர். மேலும் ஐபிஎல் தொடரில் அனைத்து அணியையும் தனது அதிரடியான பந்துவீச்சால் அச்சுறுத்திய ரபடா இருப்பது தென் ஆப்பிரிக்காவுக்கு கூடுதல் பலமாக கருதப்படுகிறது. ஆனாலும் டேல் ஸ்டெய்ன் போன்ற அனுபவ வீரர் இல்லாதது ரசிகர்கள் மத்தில் சற்று சோகமடைய வைத்துள்ளது. ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் சார்பாக விளையாடும் போது ஏற்பட்ட காயம் சரியாகததால் ஸ்டேய்ன் முதல் போட்டியில் விளையாடமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் டு பிளிஸிஸ் முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தார். இதனை அடுத்து தொடக்க ஆட்டக்காரகளாக இங்கிலாந்து அணியின் ஜசன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்ட்டோ களமிறங்கினர். உலகக்கோப்பையின் முதல் ஓவரை தென் ஆப்பிரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகீர் வீசினார். இதில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்ட்டோ எதிர் கொண்ட முதல் பந்திலேயே அவுட்டாகி அசத்தினார்.