T20 Worldcup: இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி.. பிட்ச் யாருக்கு சாதகம்? மழை வருமா? முழு தகவல்

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் அரையிறுதி ஆட்டம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

T20 Worldcup: இந்தியா - இங்கிலாந்து மோதும் அரையிறுதி போட்டி.. பிட்ச் யாருக்கு சாதகம்? மழை வருமா? முழு தகவல்

Also Read | "ஜெயிக்க போறது இந்தியா!!, Finals-ல இந்தியாவுடன் மோதப் போவது இந்த நாடு தான்".. இது டிவில்லியர்ஸ் கணக்கு..! T20WorldCup22

உலககோப்பை இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

ஆஸ்திரேலியாவில்  நடைபெற்று வரும் டி 20 உலக கோப்பை தொடர்,  தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இதில், குரூப் 1 இல் இருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 வில் இருந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளும் அரை இறுதி சுற்றுக்கு முன்னேற்றம் கண்டுள்ளன.

இன்று புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியுசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் எதிர்த்து விளையாடுகிறது.

நாளை வியாழக்கிழமை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து கிரிக்கெட் அணியை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் எதிர்த்து விளையாட உள்ளது.

ICC T20 World Cup 2022 Semi Final 2 INDIA v England

இந்த அரையிறுதி ஆட்டங்களில் வெற்றி பெறும் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ள இறுதிப்போட்டியில்  விளையாடுவார்கள். இந்த அரையிறுதி & இறுதிப்போட்டி டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து விட்டன.

அடிலெய்டு ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை (நவம்பர் 10) நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. குரூப் பி பிரிவில் இந்தியா 8 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் குரூப் ஏ பிரிவில் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக மட்டுமே ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தோல்வியை தழுவியது. பாகிஸ்தான், நெதர்லாந்து, வங்காளதேசம், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு எதிரான மற்ற நான்கு போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.

ICC T20 World Cup 2022 Semi Final 2 INDIA v England

2013 சாம்பியன்ஸ் டிராபியில் வென்ற பிறகு இந்தியா எந்த ஐசிசி போட்டிகளையும் வென்றதில்லை. அதன்பிறகு, 2014 மற்றும் 2016ல் நடந்த இரண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பைகளின் இறுதிப் போட்டி மற்றும் அரையிறுதிக்கு இந்தியா வந்துள்ளது. இந்த முறை ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி நம்பிக்கையுடன்  இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதி போட்டியை எதிர்நோக்கி உள்ளது.

அடிலெய்டு ஓவலில் உள்ள ஆடுகளத்தில் பந்து நின்று வரும் தன்மை கொண்டது. இதனால் இந்த மைதானத்தில் பேட்டிங் செய்வது எளிதானதல்ல. இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கு இந்த பந்து நின்று வரும் தன்மை கடினமாக இருக்கும்.

போட்டி நாள் - நவம்பர் 10, வியாழன் அன்று அடிலெய்டில் வெப்பநிலை 13-22 டிகிரி செல்சியஸாக இருக்கும் என கூறப்படுகிறது. இரவில் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். பகலில், காற்று தென்மேற்கு திசையில் இருந்து மணிக்கு 15 முதல் 25 கி.மீ வேகத்தில் வீசும் என கூறப்பட்டுள்ளது. அடிலெய்டு ஓவல் மைதானம் மூடிய கேலரிகள் கொண்டது என்றாலும் ஒரு பக்கம் மட்டும் திறந்த நிலையில் இருக்கும். இதனால் காற்றின் வேகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

ICC T20 World Cup 2022 Semi Final 2 INDIA v England

மழைக்கான வாய்ப்பு 8-18% என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மழையால் போட்டி பாதிக்க வாய்ப்பு குறைவு. ஈரப்பதம் 73-82% வரை இருக்கும் என்பதால் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்தை ஸ்விங் செய்ய முடியும்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான போட்டியின் போது டாஸ் ஒரு முக்கிய பங்கு வகிக்கும், ஏனெனில் டாஸ் வென்ற கேப்டன் முதலில் பேட்டிங் செய்யவே அதிக வாய்ப்பு உள்ளது.

Also Read | தமிழில் பேசி பட்டையை கிளப்பிய சூர்யகுமார்.. வீடியோவை பார்த்து ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்!!

CRICKET, T20 WORLD CUP, ICC T20 WORLD CUP 2022, ICC T20 WORLD CUP 2022 SEMI FINAL, INDIA VS ENGLAND

மற்ற செய்திகள்