'நீங்க எவ்வளவு கெத்தா இருந்தீங்க'... 'விளையாட தடை விதித்த 'ஐசிசி'... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது. இது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நீங்க எவ்வளவு கெத்தா இருந்தீங்க'... 'விளையாட தடை விதித்த 'ஐசிசி'... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!

கிரிக்கெட் உலகில் பல அதிரடி மற்றும் புகழ்பெற்ற வீரர்களை கொண்டு சிறப்பான அணியாக திகழ்ந்த அணி தான் ஜிம்பாப்வே. ஆனால் கடந்த சில வருடங்களாக அந்த அணி மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. ஜிம்பாப்வே அணியில் அரசியல் தலையீடு அதிகமாக இருக்கிறது, அது தான் அந்த அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என கூறப்பட்டது. இதனிடையே பிரச்சனை அதிகமானதையடுத்து, கடந்த மாதம் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தைக் கலைத்த அந்நாட்டு அரசு, கிரிக்கெட் தொடர்களை நிர்வகிக்க, இடைக்கால கமிட்டியைத் தேர்வு செய்திருந்தது.

இந்நிலையில் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் நடக்கும் பிரச்சனைகளை உன்னிப்பாக கவனித்து வந்த ஐசிசி, லண்டனில் நடந்த கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதித்தது. விளையாட்டில் அரசியலை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்பதில் உறுதியாக இருக்கும் ஐசிசி, ஜிம்பாப்வே அணிக்கு இடைக்கால தடை விதிக்க முடிவு செய்துள்ளது. இந்த தடையால் அந்நாட்டுக்கு ஐசிசியால் வழங்கப்பட்டு வந்த நிதி, நிறுத்தி வைக்கப்படும். மேலும் ஐசிசி நடத்தும் எந்த விதமான போட்டியிலும் ஜிம்பாப்வே அணியால் கலந்து கொள்ள முடியாது.

ஐசிசி விதித்திருக்கும் தடை சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே ''ஐசிசி விதிமுறைகளை மீறிய செயல்கள் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் நடக்கின்றன. இதனை ஐசிசியால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது'' என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் ஷஷாங் மனோகர் விளக்கமளித்துள்ளார்.

CRICKET, ICC, ZIMBABWE, INTERNATIONAL CRICKET, SUSPENDED