'2007இல் உலகக் கோப்பை ஹீரோ!'... '2020இல் நிஜ ஹீரோ'... முன்னாள் கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய ஐசிசி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜோகிந்தர் ஷர்மாவின் காவலர் பணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெகுவாக பாராட்டி உள்ளது.

'2007இல் உலகக் கோப்பை ஹீரோ!'... '2020இல் நிஜ ஹீரோ'... முன்னாள் கிரிக்கெட் வீரரை புகழ்ந்து தள்ளிய ஐசிசி!

2007ம் ஆன்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி அசத்தலாக வென்று சாதனை படைத்தது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அப்போட்டியில், இந்திய அணி சார்பாக கடைசி ஓவரை வீசியவர், வேகப்பந்து வீச்சாளர் ஜோகிந்தர் ஷர்மா. அப்போது அவர் வீசிய கடைசி ஓவரின் கடைசி பந்தில், பாகிஸ்தான் வீரர் மிஸ்பாஹ்-உல்-ஹக் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்ல, அவருடைய பங்கு இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.

அதன் பின்னர், கடந்த 2018ம் ஆண்டு டிசம்பரில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகிக்கொண்ட ஜோகிந்தர் ஷர்மா, தற்போது ஹரியானா மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவிடம் இருந்து இந்தியாவைக் காக்க ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள் என பல்வேறு தரப்பினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். அவர்களோடு இணைந்து ஒரு போலீஸ் அதிகாரியாக, தன்னால் முடிந்த சேவையை நாட்டுக்கு செய்துவருகிறார், ஜோகிந்தர் ஷர்மா.

இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, '2007ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை ஹீரோ... 2020ம் ஆண்டு நிஜ ஹீரோ' என்று பதிவிட்டு வாழ்த்துமழையை பொழிந்துள்ளது.

மேலும், 'இந்த உலகளாவிய சுகாதார சீர்கேட்டை எதிர்த்து போரிடுவதில், ஒரு காவல்துறை அதிகாரியாக தன்னுடைய பங்கை ஆற்றிவருகிறார்' என்றும் தெரிவித்துள்ளது.

2007: #T20WorldCup hero 🏆
2020: Real world hero 💪

In his post-cricket career as a policeman, India's Joginder Sharma is among those doing their bit amid a global health crisis.

[📷 Joginder Sharma] pic.twitter.com/2IAAyjX3Se
— ICC (@ICC) March 28, 2020