பட்டைய கிளப்பிய வங்கதேச பவுலர்கள்!.. பெரிய அளவில் சறுக்கிய பும்ரா!.. பவுலிங்கில் நடந்த மாற்றங்கள்!.. ஐசிசி தரவரிசை சொல்வது என்ன?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஐசிசி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலில் பும்ரா பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார்.

பட்டைய கிளப்பிய வங்கதேச பவுலர்கள்!.. பெரிய அளவில் சறுக்கிய பும்ரா!.. பவுலிங்கில் நடந்த மாற்றங்கள்!.. ஐசிசி தரவரிசை சொல்வது என்ன?

கொரோனா காரணமாக சற்று குறைவாக நடைபெற்று வந்த கிரிக்கெட் போட்டிகள் தற்போது அயல்நாடுகளில் அதிகளவில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் பவுலர்களுக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் வங்கதேச பவுலர்கள் மெஹிடி ஹாசன் மற்றும் முஸ்திவிசூர் ரஹ்மான் ஆகியோர் பெரியளவில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.

இளம் வீரர் மெஹிடி ஹாசன் 3 இடங்கள் முன்னேறி புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தை பிடித்துள்ளார். அதே போல முஸ்திவிசூர் ரஹ்மான் 8 இடங்கள் முன்னேறி புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தை பிடித்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் இலங்கை எதிரான ஒருநாள் போட்டி தொடரை வங்கதேசம் 2-0 என அபாரமாக கைப்பற்றியது. இதில் மெஹிடி ஹாசன் பெரியளவில் அணிக்கு உதவினார். 

         

இந்த புள்ளிப்பட்டியலில் நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட் 737 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துள்ளார். ஆனால் அவருக்கு மிகவும் நெருக்காம புள்ளி விகிதத்தில் தான் 2வது இடத்தில் மெஹிடி ஹாசன் உள்ளார். 3வது இடத்தில் ஆஃப்கானிஸ்தான் வீரர் முஜிபுர் ரஹ்மான் மற்றும் 4வது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மாட் ஹென்றி உள்ளார். இந்த பட்டியலில் முன்பு 2வது இடத்தில் இருந்த இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது 5வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

ஜஸ்பிரித் பும்ரா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரில் தான் கடைசியாக விளையாடினார். அதன் பிறகு பும்ரா இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் கூட அவரால் பங்கேற்க முடியவில்லை. ஐசிசி புள்ளிப்பட்டியலில் பும்ரா சரிந்ததற்கு இதுவே காரணமாக பார்க்கப்படுகிறது. 

பும்ராவின் இந்த பின்னடைவு மேலும் தொடரும் என தெரிகிறது. ஏனெனில், இந்திய அணிக்கு அடுத்ததாக வரவிருக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் பும்ரா பங்கேற்கப்போவதில்லை. மாறாக நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கவுள்ளார். இதனால் அவரின் பின்னடைவு தொடர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மற்ற செய்திகள்