'மழையால் ஆட்டம் ரத்தா?'.. 'நோ சான்ஸ்'... 'ஐசிசி திட்டவட்டம்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பையில் மழையால் பாதிக்கும் ஆட்டங்களுக்கு, மாற்று நாட்களில் நடத்துவதற்கான வாய்ப்பு இல்லை என்று ஐசிசி அறிவித்துள்ளது.

'மழையால் ஆட்டம் ரத்தா?'.. 'நோ சான்ஸ்'... 'ஐசிசி திட்டவட்டம்'!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டு வருகிறது.  இலங்கை–பாகிஸ்தான், இலங்கை–வங்காளதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையால் ரத்தானது. தென்ஆப்பிரிக்கா–வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான ஆட்டம் 7.3 ஓவர்கள் விளையாடியநிலையில், மழையால் ரத்து செய்யப்பட்டது. மழை காரணமாக அதிக ஆட்டங்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பது நடப்பு உலகக் கோப்பை போட்டியில் தான்.

மழையால் ரத்து செய்யப்படும் லீக் ஆட்டங்களுக்கு மாற்று நாள் (ரிசர்வ் டே) எதுவும் கிடையாது என்று ஐசிசி திட்டவட்டமாக கூறியுள்ளது. அரைஇறுதி மற்றும் இறுதிப்போட்டிக்கு மட்டும் மாற்று நாள் உண்டு. லீக் சுற்று ஆட்டங்களுக்கும் மாற்று நாள் அளிக்க வேண்டும் என்று வங்காளதேச அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் உள்பட பலர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் இதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

மாற்றுநாள் என்றால் போட்டியின் கால அளவு கணிசமாக அதிகரித்து விடும். இதனை நடைமுறைபடுத்துவது என்பது மிகவும் சிக்கலானதாகும். கூடுதல் ஆட்கள் தேவைப்படும். மாற்று நாளில் மழை பெய்யாது என்பதற்கு உத்தரவாதம் எதுவும் கிடையாது என ஐசிசி தெரிவித்துள்ளது. மேலும் தற்போது நிலவி வரும் வானிலை, இந்தப் பருவத்துடன் தொடர்பில்லாத வகையில் உள்ளது. இதனால் மாற்று நாட்களில் போட்டிகளை நடத்த முடியாது என ஐசிசி தெரிவித்துள்ளது.