டி20 உலகக்கோப்பைக்கு இன்னும் சில மாசம்தான் இருக்கு.. அதுக்குள்ள ‘இப்படியொரு’ சம்பவமா.. ‘2 கிரிக்கெட் வீரர்களுக்கு 8 ஆண்டு விளையாட தடை’.. ஐசிசி அதிரடி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய சூதாட்ட தரகரிடம் லஞ்சம் பெற்ற புகாரில் 2 கிரிக்கெட் வீரர்களுக்கு 8 ஆண்டுகள் விளையாட தடை விதித்து ஐசிசி அதிரடி உத்தரவிட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்களான அமீர் ஹயாத் (Amir Hayat), அஷ்ஃபக் அகமது ( Ashfaq Ahmed) ஆகிய இருவர் மீது சூதாட்ட புகார்கள் எழுந்தன. வரும் டி20 உலகக்கோப்பை தகுதிச்சுற்று போட்டிகளில் மேட்ச் பிக்சிங் செய்ய இந்திய தரகரிடமிருந்து பணம் பெற்றதாக ஐசிசிக்கு புகார் வந்துள்ளது.
கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 13-ம் தேதி, இந்திய சூதாட்ட தரகரிடமிருந்து 15,000 திர்ஹாம் (இந்திய மதிப்பில் 3 லட்ச ரூபாய்) பெற்றதாக குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்திய தரகருக்கும், இரு கிரிக்கெட் வீரர்களுக்கும் இடையிலான வாட்ஸ் அப் உரையாடல் மூலம் இது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வீரர்களான அமீர் ஹயாத், அஷ்ஃபக் அகமது ஆகிய இருவரும் 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. டி20 உலகக்கோப்பை தொடர் இந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில்தான் நடைபெற உள்ளது. இந்த தொடர் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சூதாட்ட புகாரில் இரண்டு கிரிக்கெட் வீரர்கள் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்