‘சப்ஸ்டிட்யூட் வீரர்களும் இனி, இதை பண்ணலாம்’... ‘புதிய அறிவிப்பை வெளிட்ட ஐசிசி’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆடும் லெவன் அணியில் இடம் பிடித்துள்ள வீரருக்கு, களம் இறங்க முடியாத அளவிற்கு காயம் ஏற்பட்டால், அவருக்குப் பதிலாக மாற்று வீரர் பேட்டிங் மற்றும் பந்து வீசலாம் என ஐசிசி தெரிவித்துள்ளது. 

‘சப்ஸ்டிட்யூட் வீரர்களும் இனி, இதை பண்ணலாம்’... ‘புதிய அறிவிப்பை வெளிட்ட ஐசிசி’!

கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை ஒரு அணியில் விளையாடும், பிளேயிங் 11 வீரர்கள் மட்டுமே பேட்டிங், பவுலிங் செய்து வந்தனர்.  பிளேயிங் 11-ல் இருப்பவர் பேட்டிங் ஆடும்போது, ஏதேனும் பலத்த காயம் ஏற்பட்டால், அவர் ரிட்டையர்டு ஹர்ட் செய்யப்படுவார். இறுதியாக அவர் விளையாடும் நிலையில் இருந்தால், பேட்டிங் ஆடலாம். இல்லையெனில் அப்படியே விட்டுவிடலாம். அவருக்கு பதிலாக மாற்று வீரர் ஒருவர் ஃபீல்டிங் செய்யலாம். ஆனால் பேட்டிங்கோ, பவுலிங்கோ செய்ய முடியாது. இது ஐசிசி விதிமுறைகளில் இருக்கிறது.

இந்த விதிமுறையின் காரணமாக காயப்படும் வீரர் இடம் பிடித்திருக்கும் அணிக்கு, சிரமம், சிக்கல்கள் ஏற்பட்டன. இக்கட்டான நிலையில் பந்துவீசவோ, பவுலிங் போடவோ அவருடைய பங்களிப்பு இல்லாமல் போவதால், அவர் சார்ந்த அணிக்கு பலவீனத்தை ஏற்படுத்தியது. தற்போது அந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆடும் லெவன் அணியில் எந்த வீரராவது பலத்த காயம் காரணமாக வெளியேறினால், சப்ஸ்டிட்யூட் எனப்படும் மாற்று வீரர் பேட்டிங் செய்யலாம், பந்துவீசலாம்.

கடந்த 2 ஆண்டுகளாக உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களில், இந்த விதிமுறை பரிச்சார்த்த முயற்சியாக பின்பற்றப்பட்டு வந்தது. ஆஸ்திரேலியாவின் உள்ளுர் தொடர்களிலும், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் தொழில்முறை கிரிக்கெட் தொடர்களிலும் சோதனை முயற்சியாக, மாற்று ஆட்டக்காரர்கள் பௌலிங் மற்றும் பேட்டிங் செய்ய அனுமதிக்கப்பட்டது. ஆகஸ்ட் 1–ம் தேதி முதல் இந்த விதிமுறை நடைமுறைக்கு வரும். ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகளுக்கும் இந்த விதி பொருந்தும். மகளிர் கிரிக்கெட்டுக்கும் இதே விதிதான்.