T20 போட்டிகளில் இனி புதிய விதிமுறை - பவர்ப்ளே இனி பவர்புல்லா இருக்கும் போலயே?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் போட்டிகள், ஒருநாள் போட்டிகளை எல்லாம் டி20 போட்டிகள் ஓரங்கட்டிவிட்டன என்றே சொல்லவேண்டும். அத்தனை விறுவிறுப்பு, கடைசி நிமிட டிவிஸ்ட் என டி20 தரும் பரபரப்பிறக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. இந்நிலையில் டி 20 போட்டிகளை இன்னும் விறுவிறுப்பாக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புதிய விதிமுறைகளை அமல்படுத்தவுள்ளது.
நேரமெடுக்கும் பந்துவீச்சாளர்கள்
டி20 போட்டிகளில் சில நேரங்களில் பந்துவீசும் அணி, பீல்டிங்கை அமைக்க, அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதனால் போட்டியின் போக்கு தடைபடுவதாக பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தடுக்கும் விதமாக ICC புதிய விதிமுறை ஒன்றினை அறிமுகப்படுத்த இருக்கிறது.
பெனால்டி விதி என்றழைக்கப்படும் இம்முறையின்படி பந்துவீசும் அணியானது ஒன்றரை மணி நேரத்திற்குள் 20 ஓவர்களை வீசி இருக்க வேண்டும். ஆனால் பந்துவீசும் அணி 18 ஓவர் மட்டுமே ஓன்றரை மணி நேரத்தில் வீசி இருக்கிறது என்றால், எஞ்சிய ஓவர்களில் பவுண்டரி லைனில் நிற்கும் 5 Fielder களில் ஒருவர் குறைக்கப்பட்டு, 30 yard உள்வட்டத்துக்குள் சேர்க்கப்படுவார். இது பேட்டிங் செய்யும் அணிக்கு ரன் குவிக்க தாராளமான வாய்ப்பை வழங்கும்.
இந்த பெனால்டியில் இருந்து தப்பிக்க வேண்டும் என்றால், குறிப்பிட்ட நேரத்திற்குள் 20-வது ஓவரின் முதல் பந்தை வீசி இருக்க வேண்டும். இல்லையேனில் பவுண்டரி லைனில் உள்ள ஒரு வீரர், குறைக்கப்படுவார். ஐ.சி.சி.யின் இந்த விதி, இனி டி20 கிரிக்கெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், இதனால் பெனால்டி பெற கூடாது என்பதற்காக இனி ஓவர்களை வீச பந்துவீச்சாளர்களும், கேப்டன்களும் அதிக நேரம் எடுத்து கொள்ள மாட்டார்கள். இந்த விதி ஏற்கனவே இங்கிலாந்தில் நடைபெற்ற The Hundreds தொடரில் வெற்றிக்கரமாக நடைமுறைபடுத்தப்பட்டது.
ஓய்வு
இதே போன்று ஒவ்வொரு இன்னிங்சிலும் 10 ஓவர்களுக்கு இடையில் 2 நிமிடம் 30 விநாடிகள் வீரர்கள் தண்ணீர் குடிப்பதற்காக வழங்கப்படும். இந்த ஓய்வு நேரத்தை பயன்படுத்தலாமா வேண்டாமா என்று ஒவ்வொரு தொடர் தொடங்குவதற்கு முன்பு அந்தந்த கிரிக்கெட் வாரியங்கள் முடிவு எடுத்து கொள்ளலாம். இந்த விதிகள் அனைத்தும் வரும் 16ஆம் தேதி மேற்கிந்தியத் தீவுகளும், அயர்லாந்தும் மோதும் டி20 போட்டி முதல் அமலுக்கு வருகிறது.
மற்ற செய்திகள்