'மொத்தமும் மாறிப் போச்சு'... 'புதிய விதிமுறையால் இந்திய அணிக்கு வந்த சிக்கல்'... '2 ஆம் இடத்துக்கு தள்ளப்பட்ட இந்திய அணி'...!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் முதல் இடத்தில் இருந்த இந்திய அணி திடீரென இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 2-ம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு மட்டுமே அதிக வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்ததால், டெஸ்ட் போட்டிகளுக்கு வரவேற்பு கிடைக்கும் வகையில், ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை மாற்றி. கடந்த 2019 ஆகஸ்ட் 1-ம் தேதி ஆஷஸ் தொடருடன் அறிமுகப்படுத்தியது. அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 9 நாடுகள் பங்கேற்கும் இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஒவ்வொரு அணியும் தலா 6 போட்டிகளில் பங்கேற்க வேண்டும்.
ஒரு தொடர் வெற்றிக்கு 120 புள்ளிகளும், 2, 3 ஆட்டங்கள் என்றால் அதற்கேற்றவாறு புள்ளிகளும் வழங்கப்பட்டு வந்தன. இந்த தொடர் அடுத்த வருடம் ஜூன் மாதம் 14-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. 2 வருடங்கள் போட்டி நடைபெறும். அதன்பிறகு 2-வது தொடர் 2021-2023 நடைபெறும். இந்தத் தொடரில் புள்ளிகளின் (Points) அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், இறுப்போட்டி 2021 ஜூன் 10 முதல் ஜூன் 14-ம் தேதி நடைபெறும் என அறிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பால் பல அணிகளால் திட்டமிட்டபடி டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க முடியவில்லை. இந்த நிலையில், ஜூலை 2021-க்குள் இந்த தொடரை நடத்தி முடிப்பது கடினம் என்பதால் ஐசிசி புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.
அதன்படி அணிகள் பெற்றுள்ள வெற்றிகளின் சதவீத (Percentage) அடிப்படையில் இறுதிச்சுற்றுக்கான இரு அணிகளைத் தேர்வு செய்ய ஐசிசி முடிவு செய்துள்ளது. இதனால் இதுவரை 360 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த இந்திய அணி, 75% சதவீதத்தின் அடிப்படையில் இரண்டாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
296 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த ஆஸ்திரேலியா, 82.2 சதவீதத்துடன் முதல் இடத்துக்கு முன்னேறி உள்ளது. இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த தொடரின் முடிவில் எந்த அணி அதிக சதவீதத்தில் வெற்றி பெறுகிறதோ அதை வைத்து முதல் இரண்டு இடங்கள் மாற அதிக வாய்ப்பு உள்ளது.
இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் அதிக போட்டிகளில் தோற்றால், சதவீதத்தின் அடிப்படையில் இறுதித்சுற்றுக்கு தகுதிப் பெறுவதில் சிக்கல் ஏற்படும். ஏனெனில், 3-வது இடத்தில் 60.83 சதவீதத்துடன் இங்கிலாந்தும், அதற்கு அடுத்த இடத்தில் நியூசிலாந்தும் உள்ளது. இதனால் ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி வெற்றிகளை குவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மற்ற செய்திகள்