அவர்கிட்ட இருந்து 'அத' வாங்குறப்போ... 'எனக்கு அழுக அழுகையா வந்துச்சு...' 'அவரு சொன்ன வார்த்தையால என் இதயமே குளிர்ந்து போச்சு...' - நெகிழும் இங்கிலாந்து ப்ளேயர்...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஅகமதாபாத் டி-20 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்று இங்கிலாந்து முன்னணியில் உள்ளது.
மோர்கன் டாஸ் வென்று முதலில் பீல்டிங்க் செய்ய முடிவு எடுத்தார், பிரமாதமாக வீசிய இங்கிலாந்து பவுலர்களினால் ராகுல் ஸ்டெம்ப் தெறித்தது, ரோகித் சர்மா அடிக்க முடியாமல் அவுட் ஆனார்.
இரண்டாவது போட்டியில் சிறப்பாக ஆடி பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் டவுன் ஆர்டர் மாற்றப்பட்ட நிலையில் 4 ரன்களுடன் ஜோர்டானின் ஷார்ட் பிட்ச் பந்தை அடித்து கேட்ச் ஆகி அவுட் ஆனார். 24/3 என்று ஆன இந்திய அணியை ரிஷப் பந்த், கோலி மீட்டெடுக்க போராடினர்.
ஆனால் 25 ரன்களில் கோலி, ரிஷப் பந்த்தை 3வது ரன்னுக்கு ஓட முயன்று ரன் அவுட் ஆனார் பந்த், ஆனால் விராட் கோலி தனி ஆளாக கெத்தோடு விளையாடி 77 ரன்களை அடித்தார்.
கோலியின் அதிரடி ஆட்டத்தில் 156/6 என்று இந்தியா ரன்களை குவித்தது. ஆனால் பட்லர், பேர்ஸ்டோவுக்கு அந்த ரன்கள் பெரிய விசயமில்லை. 8 விக்கெட்டுகளில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த நிலையில் முதலில் வேகப்பந்து வீச்சு பந்துகள் எழும்பி விக்கெட் கீப்பரிடம் சென்ற வேகம் நம்பவே முடியவில்லை, பயங்கர ஆச்சரியமாக இருந்தது என்றார் இங்கிலாந்து கேப்டன் மோர்கன்.
இதுகுறித்து மேலும் அவர் கூறும்போது, பிட்சை வைத்துப் பார்க்கும் போது, ஆதில் ரஷீத் நன்றாகத் தொடங்கினார். வேகப்பந்து வீச்சாளர்கள் வீச வந்தவுடன் பந்தின் வேகம் எழுச்சி எங்களுக்கு உண்மையில் நம்ப முடியாத ஆச்சரியத்தை அளித்தது.
முதல் பாதியில் எங்கள் பவுலிங் அசாத்தியமானதாக இருந்தது. பிட்சும் முழுதும் அப்படியே இருந்தது மாறவில்லை. ஜோஸ் பட்லர் ஒரு வேர்ல்டு கிளாஸ் வீரர். அவர் சராசரி 50 ஸ்ட்ரைக் ரேட் 150 என்று வைத்துள்ளார். அவர் வேற லெவல் பார்மில் இருக்கிறார். பட்லரிடம் நாம் அதிகம் கூற வேண்டியதில்லை அவரே என்ன வேண்டுமோ அதை பார்த்துக் கொள்வார்.
பட்லரிடம் இருந்து என் நூறாவது போட்டிக்கான தொப்பியை வாங்கும்போது எனக்கு அழுகையாக வந்தது. என்னோட சிறந்த நண்பர் அவர், நாங்கள் குடும்ப நண்பர்கள். அவர் எனக்குக் கூறிய வார்த்தைகள் என் இதயத்தை குளிரிவித்தன. நான் அதற்காக எக்காலத்திலும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், என்று இயான் மோர்கன் கூறியுள்ளார்.
மற்ற செய்திகள்