வறுமைல இருந்து வெளில கொண்டுவருவேன்னு அவர் அம்மாகிட்ட சத்தியம் செஞ்சவரு.. இப்போ IPL-ல பெரிய ஸ்டார்..சொல்லி அடிச்ச டெல்லி வீரர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

டெல்லி அணியின் ரோவ்மன் பாவல் குறித்து முன்னாள் மேற்கு இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயான் பிஷப் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை தெரிவித்திருக்கிறார்.

வறுமைல இருந்து வெளில கொண்டுவருவேன்னு அவர் அம்மாகிட்ட சத்தியம் செஞ்சவரு.. இப்போ IPL-ல பெரிய ஸ்டார்..சொல்லி அடிச்ச டெல்லி வீரர்..!

Also Read | எங்களுக்கு லட்டு கொடுக்கல.. ரகளையில் இறங்கிய மாப்பிள்ளை வீட்டார்.. கல்யாண வீட்டில் நடந்த சோகம்.. அதுக்கப்பறம் நடந்துதான் ஹைலைட்டே..!

ரோவ்மன் பாவல்

மேற்கு இந்திய கிரிக்கெட் வீரரான ரோவ்மன் பாவல் தற்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். 1993 ஆம் ஆண்டு ஜோலை 23 ஆம் தேதி பிறந்த பாவல் ஆரம்பத்திலிருந்தே வறுமையான சூழலில் கஷ்டப்பட்டிருக்கிறார். அம்மா மற்றும் இளைய சகோதரியுடன் பொருளாதர ரீதியாக பின்தங்கிய குடும்பத்தில் கஷ்டப்பட்டு வளர்ந்த பாவல், கிரிக்கெட் தன் வாழ்க்கையை நிச்சயம் மாற்றும் என தீர்க்கமாக நம்பியிருக்கிறார். கரீபியன் பிரீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு கிடைத்ததை சரியாக பயன்படுத்தி மேற்கு இந்திய தீவுகள் அணிக்குள் கால் பதித்தார் பாவல்.

Ian Bishop shares a touching story about DC batter Rovman Powell

அவர் வாழ்க்கை ஒரு பாடம்

முன்னாள் மேற்கு இந்திய கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயான் பிஷப் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாவல் குறித்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்றை விவரித்தார். அப்போது பேசிய பிஷப்," உங்களில் யாருக்கேனும் 10 நிமிடங்கள் இருந்தால் யூடியூபில் உள்ள ரோவ்மன் பாவலின் வாழ்க்கை பற்றிய வீடியோவை பாருங்கள். அப்போதுதான் என்னைப்போல பலரும் பாவல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதை பார்த்து ஏன் இவ்வளவு மகிழ்ச்சியடைகிறோம் என்பது புரியும். மிகவும் எளிமையான பின்புலத்தில் இருந்து வந்தவர் அவர். பள்ளியில் படிக்கும்போது வறுமையிலிருந்து உங்களை காப்பாற்றுவேன் என தனது தாய்க்கு சத்தியம் செய்திருக்கிறார் அவர். தன்னுடைய கனவினை நோக்கி அவர் செல்கிறார். மகத்தான வாழ்க்கை" எனத் தெரிவித்தார்.

Ian Bishop shares a touching story about DC batter Rovman Powell

அதிரடி ஆட்டம்

ஏப்ரல் 28 (வியாழக்கிழமை) அன்று மும்பையின் வான்கடே ஸ்டேடியத்தில் இரண்டு முறை சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான போட்டியில் 28 வயதான பாவல் 16 பந்துகளில் 33* ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் வெற்றிபெற்ற டெல்லி அணி தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது.

Ian Bishop shares a touching story about DC batter Rovman Powell

வறுமையான சூழ்நிலையில் இருந்து வந்து, கனவுகளுடன் கிரிக்கெட்டில் கால் பதித்த பாவலின் கதை பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக அமைந்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் நடைபெற்ற ஏலத்தில் ரோவ்மன் பாவலை 2.80 கோடி ரூபாய்க்கு டெல்லி அணி வாங்கியது குறிப்பிடத்தக்கது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

IAN BISHOP, STORY, DC, DELHI CAPITALS, ROVMAN POWELL, ரோவ்மன் பாவல், இயான் பிஷப்

மற்ற செய்திகள்