‘அது என் தப்புதான், அன்னைக்கு நான் அப்படி செஞ்சிருக்கக் கூடாது’!.. 10 வருசத்துக்கு முன்னாடி நடந்த ‘ரன் அவுட்’ சர்ச்சை.. இங்கிலாந்து வீரர் விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சர்ச்சையான முறையில் ரன் அவுட்டானது குறித்து முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் இயன் பெல் நினைவு கூர்ந்துள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடியது. அப்போது நாட்டிங்கமில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து வீரர் இயன் பெல்லை இந்தியா ரன் அவுட் செய்தது. அப்போது அவர் 137 ரன்கள் எடுத்திருந்தார்.
ஆனால் இந்த அவுட்டால் இயன் பெல் கடும் அதிருப்தி அடைந்திருந்தார். இது தேநீர் இடைவெளிக்கு முந்தைய கடைசி பாலில் நடந்தது. இந்த அவுட் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தேநீர் இடைவேளை முடிந்ததும் மீண்டும் இயன் பெல்லை விளையாடுவதற்கு கேப்டன் தோனி அழைத்தார்.
இந்த சம்பவம் குறித்து இயன் பெல் தற்போது நினைவு கூர்ந்துள்ளார். அதில், ‘அது ஒரு சுவாரஸ்யமான அனுபவம். பந்து பவுண்டரி லைனை கடந்திருக்கும் என கருதினேன். அப்போது நான் பசியோடு இருந்ததால், பெவிலியனுக்கு திரும்புவதிலேயே குறியாக இருந்தேன். நல்ல வேலையாக அவுட்டில் இருந்து தப்பினேன். தோனியின் அந்த செயலுக்காக தசாப்தத்தின் சிறந்த ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் (ICC Spirit of Cricket Award of the Decade) விருது அவருக்கு கிடைத்தது. ஆனால் தவறு என்னுடையது தான். அன்று நான் அப்படி செய்திருக்கக் கூடாது’ என இயன் பெல் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்